sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

கார் மீது லாரி மோதி விபத்து ஒருவர் காயம்: போலீஸ் விசாரணை

/

கார் மீது லாரி மோதி விபத்து ஒருவர் காயம்: போலீஸ் விசாரணை

கார் மீது லாரி மோதி விபத்து ஒருவர் காயம்: போலீஸ் விசாரணை

கார் மீது லாரி மோதி விபத்து ஒருவர் காயம்: போலீஸ் விசாரணை


ADDED : ஜூலை 06, 2024 05:25 AM

Google News

ADDED : ஜூலை 06, 2024 05:25 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வானுார்: கிளியனுார் அருகே கார் மீது, லாரி மோதிய விபத்தில் ஒருவர் காயமடைந்தார். சாலையோரம் கவிழ்ந்த லாரி, காரை போலீசார் மீட்டனர்.

தெலுங்கான மாநிலத்தைச் சேர்ந்தவர் லட்சுமணன் மகன் பிரதீப்ராஜ், 21; இவர், புதுச்சேரியிலிருந்து திண்டிவனம் நோக்கி நேற்று முன்தினம் இரவு சுமோ காரில் சென்று கொண்டிருந்தார். காரில் மேலும் 5 பேர் வந்தனர்.

மொளசூர், அய்யனார் கோவில் சந்திப்பு வளைவில் நள்ளிரவு 12:30 மணியளவில் வந்தபோது எதிரே திண்டிவனத்திலிருந்து புதுச்சேரி நோக்கிச் சென்ற லாரி, கார் மீது மோதியது. மோதிய வேகத்தில் காரும், லாரியும் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தன.

இந்த விபத்தில், பிரதீப் ராஜ் காயமடைந்தார். காரில் இருந்த மற்ற 5 பேரும், லாரி டிரைவரும் காயமின்றி தப்பினர்.

தகவலறிந்த கிளியனுார் போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று, விபத்தில் காயமடைந்த பிரதீப் ராஜை மீட்டு, திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து கிளியனுார் போலீசார் விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us