/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
லாரிகள் மோதி விபத்து: போக்குவரத்து பாதிப்பு
/
லாரிகள் மோதி விபத்து: போக்குவரத்து பாதிப்பு
ADDED : செப் 01, 2024 04:59 AM

விக்கிரவாண்டி : விக்கிரவாண்டியில் சாலையை கடக்க முயன்ற டிப்பர் லாரி மீது பார்சல் லாரி மோதியதில் டிரைவர் படுகாயம் அடைந்தார்.
சென்னையிலிருந்து நேற்று முன்தினம் இரவு மதுரைக்கு பார்சல் லோடு ஏற்றிக் கொண்டு லாரி புறப்பட்டது.
மதுரை, பாலமேட்டைச் சேர்ந்த டிரைவர் ரவிச்சந்திரன், 45; ஓட்டினார். நேற்று அதிகாலை 5:00 மணியளவில் விக்கிரவாண்டி தெற்கு பைபாஸ் முனை அருகே சாலையைக் கடக்க முயன்ற செங்கல் லோடு ஏற்றிய டிப்பர் லாரி மீது மோதியது.
விபத்தில் பார்சல் லாரி டிரைவர் ரவிச்சந்திரன் படுகாயமடைந்தார். உடன், முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
விபத்து காரணமாக சென்னை - திருச்சி சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
தகவலறிந்த விக்கிரவாண்டி போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று விபத்து இடர்பாடுகளை அகற்றி போக்குவரத்தை சரி செய்தனர் .இதனால் காலை 5:30 மணி வரை போக்குவரத்து பாதித்தது.