/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
மருத்துவ பணியாளர்களுக்கு காசநோய் பரிசோதனை முகாம்
/
மருத்துவ பணியாளர்களுக்கு காசநோய் பரிசோதனை முகாம்
ADDED : மே 01, 2024 01:11 AM
செஞ்சி : சத்தியமங்கலம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணிபுரியும் பணியாளர்களுக்கு காசநோய் பரிசோதனை முகாம் நடந்தது.
வட்டார மருத்துவ அலுவலர் யோகப்பிரியா முகாமை துவக்கி வைத்தார்.
முகாமில், அதிநவீன நடமாடும் எக்ஸ்ரே வாகனம் மூலம் அனைத்து பணியாளர்களுக்கும் காசநோய் கண்டறியும் சோதனை நடந்தது.
விழுப்புரம் மாவட்ட காசநோய் மைய நலகல்வியாளர் கிருஷ்ணமூர்த்தி, டாக்டர்கள் பவித்ரா, சுகுமார், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் கிருஷ்ணன், காசநோய் பிரிவு முதுநிலை சிகிச்சை மேற்பார்வையாளர் தம்பிராஜா, சுகாதார ஆய்வாளர்கள் அருண், ஜானகி, அன்புமாறன், தமிழ்மாறன், மற்றும் மருந்தாளுநர்கள், கிராமப்புற செவிலியர்கள், மக்களைத் தேடி மருத்துவ பணியாளர்கள் பங்கேற்று பரிசோதனை செய்து கொண்டனர்.