/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
விளையாட்டு, கலை போட்டிகளில் சாதிக்கும் இரட்டை சகோதரிகள்
/
விளையாட்டு, கலை போட்டிகளில் சாதிக்கும் இரட்டை சகோதரிகள்
விளையாட்டு, கலை போட்டிகளில் சாதிக்கும் இரட்டை சகோதரிகள்
விளையாட்டு, கலை போட்டிகளில் சாதிக்கும் இரட்டை சகோதரிகள்
ADDED : செப் 04, 2024 11:10 PM

விழுப்புரம்: விழுப்புரத்தில் இரட்டை பெண்கள் பல்வேறு விளையாட்டு, கலை போட்டிகளில் வென்று சாதித்து வருகின்றனர்.
விழுப்புரம் கீழ்பெரும்பாக்கத்தை சேர்ந்தவர் பிரியா மகள்கள் சுபிக்ஷா, சுமிக்ஷா. இவர்கள் தனியார் பள்ளி ஒன்றில் பிளஸ் 1 பயில்கின்றனர். இந்த இரட்டை சகோதரிகள், பள்ளியில் ஓவியம், கபடி, நடனம் உள்ளிட்ட பல போட்டிகளில் வென்று சாதித்துள்ளனர்.
இது மட்டுமின்றி பெண்களின் தற்காப்பு கலையான சிலம்பத்தில், டி.என்.ஆர்.எஸ்., அன்பு சிலம்பம் மற்றும் கராத்தே அறக்கட்டளை பயிற்சியாளர் அன்பரசி மூலம் ஒற்றை கம்பு, இரட்டை கம்பு, வால் சண்டை, குத்துவரிசை, மான் கொம்பு, தீச்சிலம்பம், அலங்கார சிலம்பம், வளரி ஆகிய கலைகளை கற்று கொண்ட சுபிக்ஷா, சுமிக்ஷா ஆகியோர், மாநிலம், தேசிய அளவிலான போட்டிகளில் வென்று, தங்கம், வெள்ளி பதக்கங்கள் மற்றும் கோப்பைகள், சான்றிதழ்களை பெற்று சாதித்துள்ளனர்.
இந்த இரட்டை சகோதரிகள், தற்காப்பு கலை கராத்தேவில் பயிற்சியாளர் சுரேஷ் மூலம் மலேசியாவில் நடந்த இன்டர்நேஷனல் கராத்தே போட்டியில் தங்கம், வெள்ளி பதக்கம் வென்று சாதித்தனர்.
இதன் மூலம் இவர்கள் சிறு வயதிலே கராத்தே போட்டி நடுவர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
தர்ஷினி இசை பயிலகம் மூலம் மஞ்சு கண்ணனிடம் இசை பயின்ற சகோதரிகள், கோவில்கள், பல மாவட்டங்களில் நடந்த இசை நிகழ்ச்சிகளில் பங்கேற்று பரிசுகளை வென்றுள்ளனர்.
நடனம், பரதநாட்டியம், வீனை வாசிக்கும் கலைகளிலும் இந்த மாணவிகள், வென்று விழுப்புரம் மாவட்டத்திற்கு பெருமை சேர்த்துள்ளனர்.
இதில், சுமிக்ஷா தற்போது நடந்த துப்பாக்கி சுடுதல் 9வது சூட்டிங் சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்று, தங்கம், வெள்ளி பதக்கம் வென்று சாதித்துள்ளனர்.
இந்த மாணவிகள், தங்களின் தாய் பிரியா ஊன்றுகோளாலும், பயிற்சியாளர்ளின் உத்வேகத்தால் பல போட்டிகளில் சாதித்து, விழுப்புரம் மாவட்டத்திற்கு பெருமையை சேர்த்துள்ளனர்.