ADDED : ஜூன் 13, 2024 12:18 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம் : விழுப்புரம் அருகே கோவிலுக்கு சென்றவருக்கு கொலை மிரட்டல் விடுத்த இருவரை போலீசார் கைது செய்தனர்.
விழுப்புரம் கமலா நகரை சேர்ந்தவர் வெங்கடேஷ்,45; இவர், கடந்த 9 ம் தேதி, தென்னமாதேவி கிராமத்தில் உள்ள அய்யனார் கோவிலில் சுவாமியை வழிபட சென்றார்.
அங்கு, குடிபோதையில் வந்த விழுப்புரம் ரகீம்லே அவுட்டை சேர்ந்த சந்திரசேகரன்,43; விராட்டிக்குப்பம் சாலை, ஏழுமலை,42; ஆகியோர் வெங்கடேஷிடம் வீண் தகராற செய்ததோடு, திட்டி தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர்.
விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்குப் பதிந்து சந்திரசேகரன், ஏழுமலையை கைது செய்தனர்.