/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
கோவில் உண்டியலை உடைத்து திருட முயன்ற இருவர் கைது
/
கோவில் உண்டியலை உடைத்து திருட முயன்ற இருவர் கைது
ADDED : ஆக 20, 2024 05:34 AM
திருவெண்ணெய்நல்லுார்: திருவெண்ணெய்நல்லுார் அருகே கோவிலின் உண்டியலை உடைத்து திருட முயன்ற இருவரை கிராம மக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.
திருவெண்ணெய்நல்லுார் அடுத்த பருகம்பட்டு கிராமத்தில் பிடாரி அம்மன் கோவில் உள்ளது. இந்நிலையில் நேற்று அதிகாலை 1:00 மணியளவில் கோவிலின் கதவு உடைப்பது போல் சத்தம் கேட்டுள்ளது. அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர்கோவிலுக்குள் சென்று பார்த்தனர். அப்போது இரு வாலிபர்கள் கோவிலின் உண்டிலை உடைக்க முயற்சி செய்துள்ளனர். இதையெடுத்து அங்குள்ளவர்கள் இருவரையும் மடக்கி பிடித்து விசாரித்தனர். அதில் கருவேப்பிலைபாளையம் கிராமத்தை சேர்ந்தவர்கள் செம்மலை மகன் விஜய், 23; மற்றும் பழனி மகன் சத்தியராஜ், 36; என தெரியவந்தது. இதையெடுத்து அப்பகுதிமக்கள் இருவரையும் திருவெண்ணெய்நல்லுார் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
போலீசார் இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.