/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
மரத்தில் பைக் மோதி விபத்து: இரு தொழிலாளர்கள் பலி
/
மரத்தில் பைக் மோதி விபத்து: இரு தொழிலாளர்கள் பலி
ADDED : மார் 11, 2025 08:45 AM

விக்கிரவாண்டி: கெடார் அருகே மரத்தின் மீது பைக் மோதிய விபத்தில், இரண்டு கூலித்தொழிலாளர்கள் பரிதாபமாக இறந்தனர்.
விழுப்புரம் அடுத்த கல்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் கார்த்திக்,29; அதே ஊரை சேர்ந்தவர் சம்பத்குமார்,22; இருவரும் சென்டரிங் தொழிலாளிகள்.
நேற்று முன்தினம் இரவு 11:30 மணியளவில், கஞ்சனுார் பகுதியில் வேலை செய்து விட்டு பைக்கில் வீடு திரும்பினர். பைக்கை கார்த்திக் ஓட்டி வந்துள்ளார்.
கெடார் அடுத்த விநாயகபுரம் சாலையில் பைக் வேகமாகவந்த போது நிலை தடுமாறி, சாலையோர மரத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது.
இதில் கார்த்திக் சம்பவ இடத்திலேயே இறந்தார். உடன் வந்த சம்பத்குமார், முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கு இறந்தார்.
விபத்து குறித்து கெடார் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.