/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
விழுப்புரம் - திண்டிவனம் மார்க்கத்தில் அறிவிக்கப்படாத பஸ் கட்டண உயர்வு

ADDED : ஜூலை 22, 2024 11:56 PM
விழுப்புரம் - திண்டிவனம் செல்லும் தனியார் பஸ்களில் கட்டணத்தை உயர்த்தி வசூலிப்பதால் பொதுமக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
விழுப்புரத்தில் இருந்து திண்டிவனம் செல்லும் பஸ்களில் குறிப்பாக விழுப்புரம் - விக்கிரவாண்டிக்கு 12 ரூபாய் இருந்தது. சில மாதங்களாக அரசு அறிவிப்பின்றி இந்த கட்டணம் 14 ரூபாயாக ஆக உயர்ந்துள்ளது. இது போன்று கூட்டேரிபட்டிற்கு விழுப்புரத்திலிருந்து 17 ரூபாய் இருந்தது. இதை 25 ரூபாயாக மாற்றி வசூலிக்கின்றனர்.
இது போன்ற பஸ்களில் என்.எச்., எக்ஸ்பிரஸ் என்ற வாசகத்தை ஒட்டிவிட்டு, சகட்டுமேனிக்கு கட்டணத்தை உயர்த்தியுள்ளனர். இதனால், பொதுமக்கள் அதிருப்தியடைந்துள்ளனர். அரசு அறிவித்துள்ள கட்டணத்திற்கும் மேலாக வசூல் செய்யும் தனியார் பஸ்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- நமது நிருபர்-