/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
டி.வி.,நல்லுாரில் ஒன்றிய குழு கூட்டம்
/
டி.வி.,நல்லுாரில் ஒன்றிய குழு கூட்டம்
ADDED : ஆக 15, 2024 05:32 AM
திருவெண்ணெய் நல்லுார்: திருவெண்ணெய்நல்லூர் பி.டி.ஓ., அலுவலகத்தில் ஒன்றியக் குழு கூட்டம் நடந்தது.
திருவெண்ணெய்நல்லுார் ஊராட்சி ஒன்றியஅலுவலகத்தில் நடந்த கூட்டத்திற்கு ஒன்றிய சேர்மன் ஓம்சிவசக்திவேல் தலைமை தாங்கினார்.
பி.டி.ஓ.,க்கள் ரவி, பாலசுப்பிரமணியன் முன்னிலை வகித்தனர்.
ஒன்றிய துணை சேர்மன் கோமதிநிர்மல்ராஜ் வரவேற்றார். உதவியாளர் அன்பு தீர்மானம் வாசித்தார்.
குடிநீர், சாலைவசதி, மின்விளக்கு, கட்டிட பணிகள் உள்ளிட்ட வளர்ச்சித் திட்ட பணிகள் குறித்தும் கவுன்சிலர்களின் தங்கள் பகுதியில் மக்கள் குறைகள் குறித்தும் கூட்டத்தில் வைத்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதில் துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள், ஒன்றிய பணி மேற்பார்வையாளர்கள், அலுவலக பணியாளர்கள், ஒன்றிய கவுன்சிலர்கள் பங்கேற்றனர். அன்பு நன்றி கூறினார்.