/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
ஒன்றிய தி.மு.க., பொதுக்குழு ஆலோசனைக் கூட்டம்
/
ஒன்றிய தி.மு.க., பொதுக்குழு ஆலோசனைக் கூட்டம்
ADDED : ஆக 31, 2024 03:21 AM

கண்டமங்கலம்: கண்டமங்கலம் கிழக்கு ஒன்றிய தி.மு.க., பொதுக்குழு உறுப்பினர்கள் ஆலோசனைக் கூட்டம் கலித்திரம்பட்டில் நடந்தது.
கூட்டத்திற்கு ஒன்றிய அவைத் தலைவர் சிவக்குமார் தலைமை தாங்கினார். செயலாளர் கணேசன் வரவேற்றார். சேர்மன் வாசன், தலைமை செயற்குழு உறுப்பினர் பாஸ்கர் முன்னிலை வகித்தனர். முன்னாள் எம்.எல்.ஏ., புஷ்பராஜ் தீர்மானங்களை விளக்கி, சிறப்புரையாற்றினார். மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் ராஜவேல், ஒன்றிய பொருளாளர் மகேந்திரவர்மன், நிர்வாகிகள் உட்பட பலர் பங்கேற்றனர்.
கூட்டத்தில், மறைந்த தி.மு.க., தலைவர் கருணாநிதியின் நுாற்றாண்டு நிறைவு விழாவை, கிளைகள் தோறும் கொண்டாடுவது. கட்சியின் சார்பு அணிகளுக்கு ஒன்றிய அளவில் நிர்வாகிகள் தேர்வு செய்வது. அனைத்து ஊராட்சிகளிலும் தெருமுனை பிரசார கூட்டங்களை நடத்துவது உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.