/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
வள்ளலார் கோவில் 10ம் ஆண்டு விழா
/
வள்ளலார் கோவில் 10ம் ஆண்டு விழா
ADDED : ஏப் 30, 2024 11:23 PM
செஞ்சி, : செஞ்சி, முல்லை நகரில் உள்ள அருட்பிரகாச வள்ளலார் கோவிலின் 10ம் ஆண்டு துவக்க விழா நடந்தது.
விழாவையொட்டி, நேற்று முன்தினம் காலை 6:00 மணிக்கு ஜோதி வழிபாடும், 7:00 மணிக்கு கொடி யேற்றமும், 8:00 மணிக்கு வள்ளலார் சுவாமி வீதியுலாவும் நடந்தது.
12:00 மணிக்கு சொற்பொழிவும், 1:00 மணிக்கு நடுப்பட்டு புருஷோத்தமன் குழுவினரின் வில்லுப்பாட்டும், 2:00 மணிக்கு சத்ய சாயி சேவ சமிதியின் சார்பில் சர்வ மத பஜனையும் நடந்தது. மாலை 5:00 மணிக்கு ஜனனி நாட்டியாலயா குழுவினரின் பரதநாட்டிய நிகழ்ச்சி நடந்தது.
அமைச்சர் மஸ்தான், ஒன்றிய சேர்மன் விஜயகுமார், ஒன்றிய செயலாளர் நெடுஞ் செழியன், அறங்காவலர் சர்தார் சிங் மற்றும் அருட்பெருஞ்ஜோதி மன்ற நிர்வாகிகள், செஞ்சி வட்ட சன் மார்க்க சங்கத்தினர் பங்கேற்றனர்.