/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
வானுார் அரசு கலை, அறிவியல் கல்லுாரி மாணவர் சேர்க்கை இன்று துவக்கம்
/
வானுார் அரசு கலை, அறிவியல் கல்லுாரி மாணவர் சேர்க்கை இன்று துவக்கம்
வானுார் அரசு கலை, அறிவியல் கல்லுாரி மாணவர் சேர்க்கை இன்று துவக்கம்
வானுார் அரசு கலை, அறிவியல் கல்லுாரி மாணவர் சேர்க்கை இன்று துவக்கம்
ADDED : மே 30, 2024 05:10 AM
வானுார் : வானுார் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு இன்று (30ம் தேதி ) துவங்குகிறது.
இது குறித்து வானுார் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரி முதல்வர் (பொறுப்பு) வில்லியம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு;
திருச்சிற்றம்பலம் கூட்ரோட்டில் உள்ள காந்தி மேல்நிலைப்பள்ளி வளாகத்தில், வானுார் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரி செயல்பட்டு வருகிறது. இக்கல்லுாரியில் ் மாணவர்கள் சேர்க்கைக்கான கலந்தாய்வு இன்று (30ம் தேதி ) துவங்குகிறது.
அதன் படி 2024-25ம் கல்வி ஆண்டிற்கான முன்னாள் ராணுவதினரின் வாரிசுகள், மாற்றுத்திறனாளிகள், விளையாட்டு வீரர்கள், என்சிசி., மாணவர்கள் உட்பட சிறப்பு ஒதுக்கீட்டின் கீழ் விண்ணப்பித்த அனைத்து மாணவர்களுக்கும் கலந்தாய்வு நடக்கிறது.
அதனை தொடர்ந்து முதலாம் கட்ட மாணவர் சேர்க்கை கலந்தாய்வு, ஜூன் 10ம் தேதி துவங்கி 15ம் தேதி வரையும், இரண்டாம் கட்ட மாணவர் சேர்க்கை கலந்தாய்வு ஜூன் 24ம் தேதி துவங்கி 29ம் தேதி வரை நடக்கிறது. மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பித்த மாணவர்களுக்கு, தங்கள் பிளஸ் 2வில் பெற்ற மதிப்பெண் தரவரிசை அடிப்படையில் மொபைல் போன் மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேரில் வரும்போது மாற்றுச்சான்று, பத்தாம் வகுப்பு, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 மதிப்பெண் பட்டியல், ஜாதிசான்று, ஆதார் அட்டை, வங்கி கணக்கு புத்தகம் ஆகியவற்றின் அசல் சான்று மற்றும் ஐந்து நகல்கள் கொண்டு வர வேண்டும். மேலும், ஐந்து பாஸ்போர்ட் சைஸ் போட்டோவுடன், பெற்றோர் அல்லது பாதுகாவலர் அழைத்து வரவேண்டும்.
இவ்வாறு செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.