/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
வரதராஜ பெருமாள் கோவில் கும்பாபிேஷக ஆண்டு விழா
/
வரதராஜ பெருமாள் கோவில் கும்பாபிேஷக ஆண்டு விழா
ADDED : ஜூன் 25, 2024 06:33 AM

விக்கிரவாண்டி, : விக்கிரவாண்டி ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோவில் கும்பாபிேஷக இரண்டாம் ஆண்டு பூர்த்தி விழாவை முன்னிட்டு சிறப்பு திருமஞ்சன பூஜை நடந்தது.
விக்கிரவாண்டி ஸ்ரீ பெருந்தேவி தாயார் சமேத ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோவில் கும்பாபிஷேகம் நடந்து2 ஆண்டுகள் முடிந்ததை முன்னிட்டு நடந்த விழாவையொட்டி நேற்று அதிகாலை 4:30 மணிக்கு சுற்றுபிரகார கோவில்களில் உள்ள சுவாமிகளுக்கு பாலாபிேஷகம் மற்றும் சுப்ரபாத சேவையுடன் துவங்கியது. காலை 7:00 மணிக்கு திருமஞ்சனம் நடந்து சிறப்பு அலங்காரம் மற்றும் மகா தீபாராதனை நடந்தது.
தொடர்ந்து, சுவாமி கோவில் வளாகத்தில் வீதியுலா நடந்தது. திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.