/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
வருமுன் காப்போம் திட்ட சிறப்பு மருத்துவ முகாம்
/
வருமுன் காப்போம் திட்ட சிறப்பு மருத்துவ முகாம்
ADDED : ஜூலை 26, 2024 10:56 PM
மயிலம்: மயிலம் ஒன்றியத்தில் முதலமைச்சரின் வருமுன் காப்போம் திட்ட சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது.
கணபதிபட்டு அரசு பள்ளி வளாகத்தில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை சார்பில் நடந்த முகாமிற்கு ஊராட்சி மன்ற தலைவர் பானுமதி மண்ணாங்கட்டி தலைமை தாங்கினார்.
வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் தேன்மொழி, ஊராட்சி மன்ற துணை தலைவர் சிவாஜி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊராட்சி செயலாளர் மனோகரன் வரவேற்றார்.
முகாமில் டாக்டர்கள் பாரதிதாசன், சரண்யா மற்றும் மருத்துவக் குழுவினர் கிராமத்தைச் சேர்ந்த பொது மக்களுக்கு, மருத்துவ ஆலோசனை மற்றும் பரிசோதனை செய்து மருந்து மாத்திரைகள் வழங்கினர்.
நிகழ்ச்சியில் வட்டார சுகாதார மேற்பார்வையாளர்கள் ரமணி, வாகீஸ்வரன்,சுகாதார ஆய்வாளர்கள் கதிரவன்,கோகுல கிருஷ்ணன் கிராம சுகாதார செவிலியர்கள் தனம், சாந்தி, பிரபா, நிஷாத் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.