sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 26, 2025 ,மார்கழி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

ஆரம்பம் முதல் இறுதிச் சுற்று வரை வி.சி., வேட்பாளர் முன்னிலை: விழுப்புரம் தொகுதி ஓட்டு எண்ணிக்கையில் விறு விறு

/

ஆரம்பம் முதல் இறுதிச் சுற்று வரை வி.சி., வேட்பாளர் முன்னிலை: விழுப்புரம் தொகுதி ஓட்டு எண்ணிக்கையில் விறு விறு

ஆரம்பம் முதல் இறுதிச் சுற்று வரை வி.சி., வேட்பாளர் முன்னிலை: விழுப்புரம் தொகுதி ஓட்டு எண்ணிக்கையில் விறு விறு

ஆரம்பம் முதல் இறுதிச் சுற்று வரை வி.சி., வேட்பாளர் முன்னிலை: விழுப்புரம் தொகுதி ஓட்டு எண்ணிக்கையில் விறு விறு


ADDED : ஜூன் 04, 2024 11:39 PM

Google News

ADDED : ஜூன் 04, 2024 11:39 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம்:விழுப்புரம் லோக்சபா தொகுதியில் வெற்றி பெற்ற வி.சி., வேட்பாளர் ரவிக்குமார் முதல் சுற்றிலிருந்து இறுதிச் சுற்று வரை முன்னிலையில் இருந்தார்.

விழுப்புரம் லோக்சபா தொகுதியில் ஓட்டு எண்ணிக்கை நேற்று நடந்தது. காலையில் 8:00 மணிக்கு தபால் ஓட்டுகள் எண்ணி முடித்த நிலையில் அடுத்ததாக மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரத்தில் பதிவான ஓட்டுகள் எண்ணப்பட்டது.

அதன்படி முதல் சுற்றில் வி.சி., ரவிக்குமார் 22,951 ஓட்டுகளும், அ.தி.மு.க., பாக்யராஜ் 20,930, பா.ம.க., முரளிசங்கர் 8,666, நா.த.க., களஞ்சியம் 2,929 ஓட்டுகள் பெற்றனர்.

2வது சுற்றில், வி.சி., 45,880, அ.தி.மு.க., 41,382, பா.ம.க., 18,670, நா.த.க., 5,871 ஓட்டுகள். 3வது சுற்றில் வி.சி., 68,239, அ.தி.மு.க., 58,285, பா.ம.க., 27,032, நா.த.க., 8,481 ஓட்டுகள். 4வது சுற்றில் வி.சி., 89,715, அ.தி.மு.க., 76,820, பா.ம.க., 26,107, நா.த.க., 11,456 ஓட்டுகள். 5வது சுற்றில் வி.சி., 1,12,480, அ.தி.மு.க., 95,195, பா.ம.க., 44,242, நா.த.க., 14,846 ஓட்டுகள் பெற்றனர்.

6வது சுற்றில் வி.சி., 1,37,115, அ.தி.மு.க., 1,14,717, பா.ம.க., 50,294, நா.த.க., 18,616 ஓட்டுகள், 7வது சுற்றில் வி.சி., 1,62,406, அ.தி.மு.க., 1,31,687, பா.ம.க., 56,667, நா.த.க., 21,331 ஓட்டுகள். 8வது சுற்றில் வி.சி., 1,85,705, அ.தி.மு.க., 1,49,403, பா.ம.க., 64,556, நா.த.க., 24,232 ஓட்டுகள். 9வது சுற்றில் வி.சி., 2,09,735, அ.தி.மு.க. 1,66,486, பா.ம.க., 71,996, நா.த.க., 27,048 ஓட்டுகள். 10வது சுற்றில் வி.சி., 2,33,419, அ.தி.மு.க., 1,84,333, பா.ம.க., 81,067, நா.த.க., 29,835 ஓட்டுகள் பெற்றனர்.

11வது சுற்றில் வி.சி., 2,56,857, அ.தி.மு.க., 2,01,557, பா.ம.க., 88,803, நா.த.க., 32,514 ஓட்டுகள். 12வது சுற்றில் வி.சி., 2,78,239, அ.தி.மு.க., 2,21,387, பா.ம.க., 99,766, நா.த.க., 35,477 ஓட்டுகள். 13வது சுற்றில் வி.சி., 3,01,599, அ.தி.மு.க., 2,41,876, பா.ம.க., 1,10,002, நா.த.க., 37,812 ஓட்டுகள். 14வது சுற்றில் வி.சி., 3,21,716, அ.தி.மு.க., 2,62,412, பா.ம.க., 1,20,295, நா.த.க., 40,174 ஓட்டுகள். 15வது சுற்றில் வி.சி., 3,42,311, அ.தி.மு.க., 2,82,968, பா.ம.க., 1,32,062, நா.த.க., 42,557 ஓட்டுகள் பெற்றனர்.

16வது சுற்றில் வி.சி., 3,64,537, அ.தி.மு.க., 3,03,235, பா.ம.க., 1,41,083, நா.த.க., 45,124 ஓட்டுகள். 17வது சுற்றில் வி.சி., 3,89,159, அ.தி.மு.க., 3,24,476, பா.ம.க., 1,50,188, நா.த.க., 47,958 ஓட்டுகள். 18வது சுற்றில் வி.சி., 4,12,168, அ.தி.மு.க., 3,44,588, பா.ம.க., 1,57,482, நா.த.க., 50,430 ஓட்டுகள். 19வது சுற்றில் வி.சி., 4,34,111, அ.தி.மு.க., 3,66,105, பா.ம.க., 1,65,383, நா.த.க., 52,783 ஓட்டுகள். 20வது சுற்றில் வி.சி., 4,52,178, அ.தி.மு.க., 3,83,740, பா.ம.க., 1,71,903, நா.த.க., 54,584 ஓட்டுகள் பெற்றனர்.

21வது சுற்றில் வி.சி., 4,61,514, அ.தி.மு.க., 3,91,244, பா.ம.க., 1,75,371, நா.த.க., 55,602 ஓட்டுகள். 22வது சுற்றில் வி.சி., 4,65,592, அ.தி.மு.க., 3,96,031, முரளிசங்கர் 1,76,579, நா.த.க., 56,009 ஓட்டுகள். 23வது சுற்றில் வி.சி., 4,69,920, அ.தி.மு.க., 4,00,189 பா.ம.க., 1,78,203, நா.த.க., 56,347 ஓட்டுகள். 24வது சுற்றில் வி.சி., 4,74,053, அ.தி.மு.க., 4,04,126, பா.ம.க., 1,79,811, நா.த.க., 56,727 ஓட்டுகள். 25வது சுற்றில் வி.சி., 4,74,230, அ.தி.மு.க., 4,04,503 பா.ம.க., 1,80,020, நா.த.க., 56,766 ஓட்டுகளும் பெற்றனர்.

இரவு 7:55 மணிவரை 25 சுற்றுகள் முடிவில் தபால் ஓட்டுகளையும் சேர்த்து வி.சி., ரவிக்குமார் 4,77,033, அ.தி.மு.க., பாக்யராஜ் 4,06,330, பா.ம.க., முரளிசங்கர் 1,81, 882, நாம் தமிழர் கட்சி களஞ்சியம் 57,242 ஓட்டுகள் பெற்றதாகவும், வி.சி., வேட்பாளர் ரவிக்குமார் 70,703 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாகவும் அறிவிக்கப்பட்டார். அதனைத் தொடர்ந்து அவருக்கு வெற்றி பெற்றதற்கான சான்றிதழை மாவட்ட தேர்தல் அதிகாரி பழனி வழங்கினார்.






      Dinamalar
      Follow us