/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
வி.சி., கட்சி மாவட்ட செயற்குழு கூட்டம்
/
வி.சி., கட்சி மாவட்ட செயற்குழு கூட்டம்
ADDED : ஆக 07, 2024 06:07 AM

திண்டிவனம் : திண்டிவனத்தில், வி.சி.கட்சியின் மைய மாவட்ட செயற்குழு கூட்டம் நடந்தது.
திண்டிவனத்திலுள்ள ராஜராஜன் திருமண மண்டபத்தில் நடந்த கூட்டத்திற்கு வி.சி., மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் திலீபன் தலைமை தாங்கினார். நகர செயலாளர் இமயன் வரவேற்றார்.
கூட்டத்தில் விழுப்புரம் எம்.பி., துரைரவிக்குமார் சிறப்புரையாற்றினார்.
கூட்டத்தில் மாநில செயலாளர் குணவழன், நிர்வாகிகள் இரணியன், வேந்தன், கார்மேகம், வெற்றிவேந்தன், ஜப்பார், திண்டிவனம் நகர்மன்ற துணை தலைவர் ராஜலட்சுமிவெற்றிவேல் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் வரும் 17ம் தேதி கட்சியின் தலைவர் திருமாவளவன் பிறந்த நாளை சிறப்பாக கொண்டாடுவது உள்ளிட்டவைகள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.