/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
கிரிவலத்திற்கு சென்ற வாகனங்கள் பைபாஸ் வழியாக அனுப்பி வைப்பு
/
கிரிவலத்திற்கு சென்ற வாகனங்கள் பைபாஸ் வழியாக அனுப்பி வைப்பு
கிரிவலத்திற்கு சென்ற வாகனங்கள் பைபாஸ் வழியாக அனுப்பி வைப்பு
கிரிவலத்திற்கு சென்ற வாகனங்கள் பைபாஸ் வழியாக அனுப்பி வைப்பு
ADDED : ஏப் 24, 2024 03:07 AM

செஞ்சி : செஞ்சியில் பைபாஸ் துவங்கும் இடம் தெரியாமல் நகருக்குள் வந்த வாகனங்களை போக்குவரத்து போலீசார் தடுத்து நிறுத்தி பைபாஸ் வழியாக அனுப்பி வைத்தனர்.
செஞ்சி நகரில் பைபாஸ் பணிகள் முடிந்து கடந்த 3 மாதங்களாக பயன்பாட்டிற்கு வந்துள்ளது. இதில் சென்னை, புதுச்சேரி, திண்டிவனம் மார்க்கமாக வரும் வாகனங்கள் திருவண்ணாமலை, பெங்களூரூ, கிருஷ்ணகிரி செல்வதற்கு செஞ்சி பைபாசில் அறிவிப்பு பலகை இல்லாததால் நகரத்தின் வழியாக செல்கின்றனர்.
நேற்று திருவண்ணாமலைக்கு சித்ரா பவுர்ணமி கிரிவலத்திற்கு சென்ற வாகனங்கள் பைபாஸ் வழியாக செல்லாமல் செஞ்சி வழியாக சென்றதால் செஞ்சியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இதைடுத்து நேற்று பிற்பகல் 3:00 மணியில் இருந்து போக்குவரத்து இன்ஸ்பெக்டர் அப்பாண்டைராஜன், சப் இன்ஸ்பெக்டர் பலராமன் ஆகியோர் தலைமையில் போக்குவரத்து போலீசார் பைபாஸ் துவங்கும் இடத்தில் நின்று திருவண்ணாமலை சென்ற அனைத்து வாகனங்களையும் தடுத்து நிறுத்தி பைபாஸ் வழியாக அனுப்பி வைத்தனர்.
இதனால் செஞ்சி நகரில் ஓரளவிற்கு நெரிசல் குறைந்தது. இதற்கு நிறந்தர தீர்வாக தேசிய நெடுஞ்சாலை ஆணையம் பைாபஸ் துவங்கும் இடத்தில் உடனடியாக அறிவிப்பு பலகைகளை அதிக அளவில் அமைக்க வேண்டும்.

