/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
தேர்தல் முடிந்து பணிக்கு திரும்பியதால் நெடுஞ்சாலையில் வாகனங்கள் அணிவகுப்பு
/
தேர்தல் முடிந்து பணிக்கு திரும்பியதால் நெடுஞ்சாலையில் வாகனங்கள் அணிவகுப்பு
தேர்தல் முடிந்து பணிக்கு திரும்பியதால் நெடுஞ்சாலையில் வாகனங்கள் அணிவகுப்பு
தேர்தல் முடிந்து பணிக்கு திரும்பியதால் நெடுஞ்சாலையில் வாகனங்கள் அணிவகுப்பு
ADDED : ஏப் 22, 2024 05:44 AM

விக்கிரவாண்டி: லோக்சபா தேர்தலில் ஓட்டு போட சொந்த ஊருக்குச் சென்றவர்கள் விடுமுறை முடிந்த மீண்டும் பணிக்கு திரும்பியதால் நெடுஞ்சாலையில் வாகன போக்குவரத்து அதிகரித்ததால் டோல்கேட்டில் நெரிசல் ஏற்பட்டது.
சென்னை தலைநகரில் பணிபுரிபவர்களும், தென் மாவட்டத்தில் பணிபுரிபவர்களும் கடந்த 19ம் தேதி லோக்சபா தேர்தலையொட்டி ஓட்டு போடுவதற்காக சொந்த ஊர்களுக்குச் சென்றனர்.
தொடர்ந்து சனி, ஞாயிறு விடுமுறை காரணமாக 3 நாட்களுக்குப் பின் நேற்று மீண்டும் அவரவர்கள் சொந்த இடங்களுக்கு கார், பஸ், இருசக்கர வாகனங்களில் திரும்பினர்.
இதனால் திருச்சி - சென்னை சாலையிலும், சென்னை - திருச்சி சாலையிலும் பாதசாரிகள் சாலையை கடக்க முடியாத வகையில் வாகனங்களின் அணிவகுப்பு அதிகரித்து காணப்பட்டது.
விக்கிரவாண்டி டோல்கேட்டில் நேற்று மாலை 4:00 மணி முதல் சாலைகளில் இரு புறமும் வாகனங்கள் அதிகரித்ததால் கூடுதல் லேன்களை திறக்க முடியாமல் வழக்கமாக வாகனங்கள் செல்லும் 6 லேன்கள் மட்டுமே திறக்கப்பட்டிருந்தது.
இதனால் வாகனங்கள் எளிதாக டோல் பிளாசா கடக்க முடியாமல் இருபுறமும் 3 கி.மீ., துாரம் வரை அணிவகுத்து நின்றன.
நேற்று விக்கிரவாண்டி டோல் கேட்டை 55 ஆயிரம் வாகனங்கள் கடந்து சென்றன.
இது சராசரியாக செல்லும் வாகனங்களை விட 30 ஆயிரம் வாகனங்கள் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

