/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
கால்நடை மருத்துவ சேவை எம் . எல் . ஏ ., துவக்கி வைப்பு
/
கால்நடை மருத்துவ சேவை எம் . எல் . ஏ ., துவக்கி வைப்பு
கால்நடை மருத்துவ சேவை எம் . எல் . ஏ ., துவக்கி வைப்பு
கால்நடை மருத்துவ சேவை எம் . எல் . ஏ ., துவக்கி வைப்பு
ADDED : மார் 05, 2025 05:29 AM

செஞ்சி: செஞ்சி ஒன்றிய அலுவலகத்தில், கால்நடை பராமரிப்பு துறை சார்பில் கால்நடைகளுக்கான நடமாடும் மருத்துவ சேவை வாகனங்கள் துவக்க நிகழ்ச்சி நடந்தது.
ஒன்றிய சேர்மேன் விஜயகுமார் தலைமை தாங்கினார். கால்நடைத் துறை உதவி இயக்குனர் தண்டபாணி வரவேற்றார். மஸ்தான் எம்.எல்.ஏ., நடமாடும் மருத்துவ சேவை வாகனத்தை துவக்கி வைத்து பேசுகையில், 'நடமாடும் கால்நடை மருத்துவ வாகனங்கள் மூலம் கால்நடை மருந்தகங்கள் இல்லாத கிராமங்களைச் சேர்ந்த கால்நடை வளர்ப்பவர்கள் பயன் பெறுவார்கள்.
செயற்கை கருவூட்டல், குடற்புழு நீக்கம், தடுப்பூசி மூலம் கால்நைடைகள் பெருக்கம் ஏற்படுகிறது. இதனால் ஆடு, மாடு வளர்க்கும் ஏழை, எளிய மக்கள் பயன்பெறுவார்கள். அத்துடன் நீண்ட துாரம் கால்நடைகளை கொண்டு வந்து சிகிச்சை பெற்று வந்தவர்கள் இதற்கான 1962 என்ற தொலைபேசி எண்ணில் அழைத்தால் இந்த வாகனம் அங்கு சென்று சிகிச்சை மேற்கொள்ளப்படும்' என்றார்.
ஒன்றிய செயலாளர்கள் நெடுஞ்செழியன், பச்சையப்பன், கால்நடை டாக்டர்கள் செந்தில்குமார், மணிமாறன், சபரிமலைவாசன், அருண், பரத், கிருபாகரன் பங்கேற்றனர்.
மயிலம்
திண்டிவனம் கோட்ட கால்நடை பராமரிப்புத்துறை சார்பில், மயிலம் பி.டி.ஓ., அலுவலகத்தில் நடந்த நடமாடும் மருத்துவ வாகனம் துவக்க விழாவிற்கு, மஸ்தான் எம்.எல்.ஏ., தலைமை தாங்கி வாகனத்தை துவக்கி வைத்தார். மயிலம் சேர்மன் யோகேஸ்வரி முன்னிலை வகித்தார். முன்னாள் எம்.எல்.ஏ., மாசிலாமணி, மயிலம் வடக்கு ஒன்றிய செயலாளர் மணிமாறன், விவசாய அணி பாஸ்கர், திண்டிவனம் நகர செயலாளர் கண்ணன், கவுன்சிலர் கிஷோர், பாலசுந்தரம் உட்பட பங்கேற்றனர்.