/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
கண்காணிப்பு குழு சோதனை ரூ.1.50 லட்சம் பறிமுதல்
/
கண்காணிப்பு குழு சோதனை ரூ.1.50 லட்சம் பறிமுதல்
ADDED : ஏப் 02, 2024 04:38 AM

விக்கிரவாண்டி : விக்கிரவாண்டி அருகே உரிய ஆவணமின்றி கொண்டு செல்லப்பட்ட 1.50 லட்சம் ரூபாயை தேர்தல் நிலை கண்காணிப்பு குழுவினர் பறிமுதல் செய்தனர்.
விக்கிரவாண்டி தொகுதி தேர்தல் நிலை கண்காணிப்பு குழு அலுவலர் சரவணன் தலைமையில் போலீசார் நேற்று பிற்பகல் 3:30 மணியளவில் விக்கிரவாண்டி கயத்துார் சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியாக வந்த ஸ்கூட்டரை நிறுத்தி சோதனை செய்தனர். அதில், ஆவணங்கள் ஏதுமின்றி ஒரு லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் கொண்டு சென்றது தெரியவந்தது.
விசாரணையில் அவர் ஆவுடையார்பட்டைச் சேர்ந்த எட்டியான், 42; மளிகை வியாபாரி எனவும், பைனான்சில் கட்டுவதற்காக பணம் எடுத்துச் செல்வதாக கூறினார்.
ஆனால், உரிய ஆவணங்கள் இல்லாததால் கண்காணிப்பு குழு அலுவலர்கள் பணத்தை பறிமுதல் செய்து விக்கிரவாண்டி தொகுதி தேர்தல் நடத்தும் உதவி தேர்தல் அலுவலர் சந்திரசேகரனிடம் ஒப்படைத்தனர்.

