/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
விக்கிரவாண்டி இடைத்தேர்தல் விழிப்புணர்வு பிரசாரம்
/
விக்கிரவாண்டி இடைத்தேர்தல் விழிப்புணர்வு பிரசாரம்
ADDED : ஜூன் 28, 2024 11:24 PM

விக்கிரவாண்டி: விக்கிரவாண்டியில் மாற்று திறனாளிகள் இடைத்தேர்தலில் 100 சதவீத ஓட்டளிக்கும் வகையில் விழிப்புணர்வு பிரசாரம் நடந்தது.
விழுப்புரம் மாவட்ட மாற்றுத்திறனாளி நலத்துறை மற்றும் டிசம்பர் 3 இயக்கம், புதுச்சேரி சத்யா மாற்றுத்திறனாளி பள்ளி,புதிய அலை மாற்றுத்திறனாளிகள் கூட்டமைப்பு, கொணமங்கலம் சிருஷ்டி மாற்றுத்திறனாளி பள்ளி சார்பில் நேற்று நடந்த விழிப்புணர்வு பிரசாரத்திற்கு மாவட்டநல அலுவலர் தங்கவேலு தலைமை தாங்கினார்.
தேர்தல் தனி துணை தாசில்தார் வெங்கடேசன், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் தேவநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.வருவாய் ஆய்வாளர் தெய்வீகன்வரவேற்றார் . மண்டல துணை தாசில்தார் ஆறுமுகம், சப்- இன்ஸ்பெக்டர் காத்து முத்து ஆகியோர் விழிப்புணர்வு பேரணியை கொடி அசைத்து துவக்கி வைத்தனர்.
பேரணியில் மாற்றுத்திறனாளி மாணவர்கள் 100 சதவீதஓட்டளிக்க வலியுறுத்தி பதாகைகள் ஏந்தி கடைவீதி வழியாக ஊர்வலமாக பஸ் நிலையம் வந்தடைந்தனர். டிசம்பர் 3 இயக்க நிறுவனர் அண்ணாமலை, மாவட்டத் தலைவர் மாரிமுத்து, துணைத் தலைவர் பாஸ்கர், வெங்கடேசன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.