/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
விக்கிரவாண்டி பேரூராட்சி கூட்டம்
/
விக்கிரவாண்டி பேரூராட்சி கூட்டம்
ADDED : ஜூலை 25, 2024 11:24 PM
விக்கிரவாண்டி: விக்கிரவாண்டியில் வெங்கடேஸ்வரா நகரில் சாலை வசதி செய்திட பேரூராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
விக்கிரவாண்டியில் நடந்த பேரூராட்சி கூட்டத்திற்கு அப்துல் சலாம் தலைமை தாங்கினார். துணைச் சேர்மன் பாலாஜி செயல் அலுவலர் ஷேக் லத்திப் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இளநிலை உதவியாளர் ராஜேஷ் வரவேற்று தீர்மானங்களை படித்தார்.
கூட்டத்தில் விக்கிரவாண்டி வெங்கடேஸ்வரா நகரில் சாலை வசதி ஏற்படுத்துவது. மேலும் பேரூராட்சியில் வளர்ச்சி திட்டப் பணிகள் மேற்கொள்வது என்பது உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
பேரூராட்சி நியமனக்குழு உறுப்பினர் சர்க்கார் பாபு, கவுன்சிலர்கள் கனகா, சுரேஷ், ரமேஷ், ரேவதி, புஷ்பராஜ், ஆனந்தி, சுதா, பிரியா, பவானி, வீரவேல், சுபா, வெண்ணிலா, துப்புரவு ஆய்வாளர் முத்துக்குமரன், மேற்பார்வையாளர் ராமலிங்கம், வரி தண்டலர் தண்டபாணி உட்பட பலர் பங்கேற்றனர்.