/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
கோவில் இடத்தில் வெடிமருந்து கிடங்கு அனுமதி அளிக்க கிராம மக்கள் எதிர்ப்பு

ADDED : ஜூலை 07, 2024 04:15 AM

செஞ்சி: குறிஞ்சிப்பை அய்யனார் கோவில் இடத்தை ஆக்கிரமிப்பு செய்வதை தடுக்க வேண்டும் என கிராம மக்கள் தாசில்தாரிடம் மனு கொடுத்துள்ளனர்.
செஞ்சி அடுத்த குறிஞ்சிப்பை கிராம பொது மக்கள் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர் சார்பாகவும், நேற்று செஞ்சி தலைமையிடத்து துணை தாசில்தார் நெகருன்னிசாவிடம் மனு கொடுத்தனர்.
மனுவில், ''குறிஞ்சிப்பை கிராம மலை அடிவாரத்தில் அய்யனார் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு என 700 ஆண்டுகளுக்கு முன்பு 7 ஏக்கர் 66 செண்ட் நிலத்தை மூதாதையர்கள் எழுதி வைத்துள்ளனர். இந்த இடத்தின் ஒரு பகுதியில் தனிநபர் ஒருவர் ஆக்கிரமித்து அதில் உள்ள கனிம வளங்களை வெடி வைத்து கடத்தி செல்கின்றார். மேலும் அங்கு வெடி மருந்து கிடங்கு கட்டவும் ஏற்பாடு செய்து வருகின்றார்.
இந்த இடம் கோவிலுக்கு 50 அடி துாரத்தில் உள்ளது. இங்கு ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் கிராம மக்கள் சாமி கும்பிட்டு வருகின்றனர். இங்கு வெடிமருந்து கிடங்கு அமைக்க அனுமதி தரக்கூடாது.
அனுமதி அளித்தால் கிராம மக்கள் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளோம் என மனுவில் தெரிவித்துள்ளனர்.