/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
மருதுாரில் பாதாள சாக்கடை சுத்திகரிப்பு நிலையம் அமைக்க எதிர்ப்பு விழுப்புரம் கலெக்டர் அலுவலம் முற்றுகை

ADDED : மே 30, 2024 05:17 AM

விழுப்புரம்: விழுப்புரம் வி.மருதுார் சுடுகாடு பகுதியில் பாதாள சாக்கடை சுத்திகரிப்பு நிலையம் கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அப்பகுதி மக்கள் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
விழுப்புரம் பவர் ஹவுஸ் சாலை மருதுார் சுடுகாடு இடத்தில், நகராட்சி சார்பில் பாதாள சாக்கடை சுத்திகரிப்பு நிலையம் அமைப்பதற்காக நேற்று முன்தினம் பூர்வாங்க பணியை துவங்கினர். இதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து பணியை தடுத்து நிறுத்தினர்.
நேற்று மீண்டும், பாதாள சாக்கடை சுத்திகரிப்பு நிலையம் அமைப்பதற்கான ஆயத்த பணிகளை மேற்கொண்டுள்ளனர். இதனால், ஆத்திரமடைந்த வி.மருதுார், கிழக்கு பாண்டிரோடு சுற்று பகுதியை சேர்ந்த பொது மக்கள், நேற்று பகல் 11;00 மணிக்கு கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி, கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுப்பதற்காக உள்ளே அனுப்பி வைத்தனர்.
மனு கொடுத்த பின் பொதுமக்கள் கூறியதாவது:
விழுப்புரம் பவர் ஹவுஸ் சாலையில், மருதுார் பகுதிக்கான மயானம் உள்ளது. வி.மருதுார் கிழக்கு பாண்டிரோடு, ரயில்வே காலனி உள்ளிட்ட 10 வார்டு பொது மக்களின் பயன்பாட்டில் இருந்து வருகிறது.
இங்கு பாதாள சாக்கடை சுத்திகரிப்பு நிலையம் மற்றும் பம்பிங் ஸ்டேஷன் அமைத்தால், சுடுகாடுக்கு இடம் இல்லாத நிலை ஏற்படும். நிலத்தடி நீரும் பாதிக்கப்பட்டு விவசாயமும் பெறும் பாதிப்புக்குள்ளாகும். அந்த பகுதியில் மட்டும் தான் 50 அடி ஆழத்தில் நல்ல குடிநீர் கிடைக்கிறது. இதனால், பொதுமக்கள் நலன் கருதி, பாதாள சாக்கடை சுத்திகரிப்பு நிலையம் மற்றும் பம்பிங் ஸ்டேஷன் திட்டத்தை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என குறிப்பிட்டனர். மனுவை பெற்ற அதிகாரிகள், கலெக்டரிடம் தெரிவித்து நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததால், அவர்கள் கலைந்து சென்றனர்.