/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
அ.தி.மு.க., வேட்பாளரை ஆதரித்து விழுப்புரம் கவுன்சிலர் ஓட்டு சேகரிப்பு

ADDED : ஏப் 15, 2024 05:39 AM

விழுப்புரம் : விழுப்புரம் தொகுதி அ.தி.மு.க., வேட்பாளர் பாக்யராஜை ஆதரித்து, கவுன்சிலர் ராதிகா தலைமையில் ஓட்டு சேகரித்தனர்.
விழுப்புரம் நகராட்சி 9வது வார்டு, வடக்குத்தெரு பகுதியில், திறந்த ஜீப்பில் பிரசாரம் செய்த வேட்பாளர் பாக்யராஜிக்கு, நகர அ.தி.மு.க., துணைச் செயலாளர் வழக்கறிஞர் செந்தில் தலைமையில், வரவேற்பு அளிக்கப்பட்டது.
நகர செயலாளர்கள் பசுபதி, வண்டிமேடு ராமதாஸ், முன்னாள் மாவட்ட கவுன்சிலர் செங்குட்டுவன், விழுப்புரம் தொகுதி வழக்கறிஞர் பிரிவு செயலாளரான கவுன்சிலர் ராதிகா செந்தில்.
தகவல் தொழில்நுட்ப பிரிவு மண்டல பொருளாளர் ஜெகதீஸ்வரி சத்யராஜ், மாவட்ட பேரவை துணைச் செயலாளர் திருப்பதி பாலாஜி, பேரவைச் செயலாளர் கிருஷ்ணன், சிறுபான்மை பிரிவு ைஹதர் ெஷரீப் உட்பட பலர் பங்கேற்றனர்.
தொடர்ந்து, ஏராளமானோர் பைக்குகளில் ஊர்வலமாக சென்று, நகரின் மற்ற பகுதிகளில் ஓட்டு சேகரித்தனர். முன்னதாக, கவுன்சிலர் ராதிகா தலைமையில், வார்டு பொதுமக்களிடம் அ.தி.மு.க.,வினர் ஓட்டு சேகரித்தனர்.