/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
விழுப்புரம், கள்ளக்குறிச்சியில் வெள்ளையன் மறைவுக்கு அஞ்சலி
/
விழுப்புரம், கள்ளக்குறிச்சியில் வெள்ளையன் மறைவுக்கு அஞ்சலி
விழுப்புரம், கள்ளக்குறிச்சியில் வெள்ளையன் மறைவுக்கு அஞ்சலி
விழுப்புரம், கள்ளக்குறிச்சியில் வெள்ளையன் மறைவுக்கு அஞ்சலி
ADDED : செப் 11, 2024 11:13 PM

திண்டிவனம் : வெள்ளயைன் இறந்ததையொட்டி விழுப்புரம் ,கள்ளக்குறிச்சி பகுதி வணிகர் சங்கத்தினர் அமைதி ஊர்வலம் நடத்தினர்.
வணிகர் சங்க பேரவையின் மாநில தலைவர் வெள்ளையன் உடல் நிலை சரியில்லாமல் நேற்று முன்தினம் இறந்துவிட்டார். இதை தொடர்ந்து திண்டிவனம் அனைத்து வியாபாரிகள் சங்கங்களின் தலைவர் ராம்டெக்ஸ் வெங்கடேசன் தலைமையில் நேற்று கடையடைப்பு நடத்தி அமைதி ஊர்வலம் நடந்தது.
திண்டிவனம் காமராஜர் சிலை அருகிலிருந்து நகரத்தின் முக்கிய வீதிகள் வழியாக வந்த ஊர்வலத்தில் சங்க நிர்வாகிகள் பி.ஆர்.எஸ்.துணிக்டை ரங்கமன்னார், ராம்லால்ரமேஷ், ஏழுமலை, ஜாகீர்உசேன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
செஞ்சி; செஞ்சியில் நேற்று வர்த்த சங்கத்தினர் கடையடைப்பு நடத்தி மவுண ஊர்வலம் சென்று அஞ்சலி செலுத்தினர்.
ஊர்வலத்திற்கு சங்க தலைவர் செல்வராஜ், சேம்பர் ஆப் காமர்ஸ் தலைவர் சங்கர் ஆகியோர் தலைமை தாங்கினர். செயலாளர் வெங்கட், பொருளாளர்கள் அம்ஜத்பாண்டே சீனுவாசன் முன்னிலை வகித்தனர். ஊர்வலம் கூட்ரோட்டில் முடிவடைந்தது. அங்கு நடந்த இரங்கல் கூட்டமும், வெள்ளையன் படத்திற்கு பல்வேறு சங்கங்களைச் சேர்ந்த நிர்வாகிகள் மலர் துாவி அஞ்சலி செலுத்தினர்.
சங்கராபுரம்: சங்கராபுரத்தில் கடையடைப்பு நடத்தி பின் நடந்த மவுன ஊர்வலத்திற்கு பேரவை மாவட்ட பொருளாளர் முத்துக்கருப்பன் தலைமை தாங்கினார். கூட்டத்தில் வியாபாரிகள் சங்க தலைவர் சக்கரவர்த்தி,செயலாளர் குசேலன்,துணை தலைவர் சர்புதீன்,பொருளாளர் சாதிக்,ராசேந்திரன்,தயாநந்தன்,ரோட்டரி தலைவர் அசோக்குமார், வேலு,கிருஷ்ணமுர்த்தி, சுதாகரன்விஜயகுமார், துரைராஜ்,வெங்கடேசன்,ஆசிரியர் லட்சுமிபதி, சுப்பராயன் ஆகியோர் பங்கேற்றனர்.