/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
பெண் வயிற்றில் இருந்த 9 கிலோ கட்டி அகற்றம்
/
பெண் வயிற்றில் இருந்த 9 கிலோ கட்டி அகற்றம்
ADDED : ஜூலை 28, 2024 07:43 AM

விழுப்புரம் : விழுப்புரம் மெட்வே மருத்துவமனையில் பெண்ணின் வயிற்றிலிருந்த 9 கிலோ கட்டி அகற்றப்பட்டது.
திருவண்ணாமலை மாவட்டம், தெள்ளார் அடுத்த இரும்புலி கிராமத்தை சேர்ந்தவர் அஞ்சலை, 57; இவர், கடந்த 2 ஆண்டுகளாக வயிற்று வலி மற்றும் வயிறு வீக்கம் காரணமாக அவதிப்பட்டு வந்தார். கடந்த 20ம் தேதி வயிற்று வலி, வயிறு வீங்கி, குடல் அடைப்பு ஏற்பட்டு அவசர சிகிச்சைக்காக விழுப்புரம் மெட்வே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள், வயிற்றில் கட்டி இருப்பதையறிந்து, அறுவை சிகிச்சை நிபுணர் சந்தோஷ், மருத்துவர்கள் அமுதாம்பிகை, சரண்யா உள்ளிட்ட குழுவினர், கடந்த 23ம் தேதி அறுவை சிகிச்சை மேற்கொண்டு, அவரது வயிற்றில் இருந்து 9 கிலோ எடை கொண்ட கட்டியை அகற்றினர்.
இதுகுறித்து, மருத்துவர்கள் கூறுகையில், அஞ்சலையின் வயிற்றில் கர்பப்பை அருகே கருமுட்டையிலிருந்து ஒரு கட்டி வளர்ந்து வந்துள்ளது. இதனால், அவரது வயிறு வீங்கிய நிலையில், வலியால் அவதிப்பட்டுள்ளார். உடனடியாக அவருக்கு இங்கு அறுவை சிகிச்சை செய்து, கட்டி அகற்றப்பட்டு, இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளார் என்றனர்.