/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
விழுப்புரம் பெருமாள் கோவில் நாளை கும்பாபிஷேகம்
/
விழுப்புரம் பெருமாள் கோவில் நாளை கும்பாபிஷேகம்
ADDED : செப் 14, 2024 07:52 AM

விழுப்புரம்: விழுப்புரம் வைகுண்டவாச பெருமாள் கோவில் கும்பாபிஷேக விழா நாளை (15ம் தேதி) நடக்கிறது.
விழுப்புரம் ஜனகவள்ளி தாயார் சமேத வைகுண்டவாச பெருமாள் கோவில் கும்பாபிஷேக விழாவினையொட்டி நேற்று காலை 8:00 மணிக்கு யாகசாலை வாஸ்துசாந்தி, மகா சாந்தி ஹோமங்களுடன் நிகழ்ச்சி துவங்கியது.
தொடர்ந்து, காலை 11 மணிக்கு பூர்ணாஹீதியும், மாலை 4:30 மணிக்கு புண்யாஹவாசனம், அங்குரார்ப்பணம், இரவு 9:00 முதல் கால பூஜை, வே த பிரபிந்த சாற்றுமுறை நடந்தது.
இன்று காலை 7:00 மணிக்கு கும்ப ஆராதனம், நித்ய ஹோமம், இரண்டாம் கால பூஜை நடக்கிறது. மாலை 4:00 மணி மகா சாந்தி திருமஞ்சனம், பிரதான மூர்த்தி ஹோமங்கள், இரவு 9:00 மணிக்கு மூன்றாம் கால பூஜையும் நடக்கிறது.
நாளை (15ம் தேதி) காலை 6:30 மணி முதல் காலை 8:00 மணிக்குள் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் நடக்கிறது.