/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
95 கிலோ குட்காவுடன் கார் பறிமுதல் விழுப்புரம் போலீசார் அதிரடி
/
95 கிலோ குட்காவுடன் கார் பறிமுதல் விழுப்புரம் போலீசார் அதிரடி
95 கிலோ குட்காவுடன் கார் பறிமுதல் விழுப்புரம் போலீசார் அதிரடி
95 கிலோ குட்காவுடன் கார் பறிமுதல் விழுப்புரம் போலீசார் அதிரடி
ADDED : ஆக 08, 2024 12:24 AM

விழுப்புரம், : விழுப்புரத்தில் சாலை ஓரம் ரூ.1.5 லட்சம் மதிப்புள்ள 95 கிலோ குட்காவுடன் நின்ற காரை போலீசார் பறிமுதல் செய்தனர்.
விழுப்புரம் தாலுகா சப்-இன்ஸ்பெக்டர் அன்பழகன் மற்றும் போலீசார் நேற்று மாலை 5.00 மணிக்கு ரோந்து சென்றனர்.
அப்போது, முத்தாம்பாளையம் பைபாஸ் அருகே சாலையோரத்தில் நின்றிருந்த டாடா சுமோ காரை, சந்தேகத்தின் பேரில் சோதனை செய்தனர். காருக்குள் இருந்த 7 சாக்கு மூட்டைகளை பிரித்து பார்த்தபோது, அரசால் தடை செய்யபட்ட குட்கா பொருட்கள் 95 கிலோ இருந்தது தெரிய வந்தது. இதன் மதிப்பு ரூ.1.5 லட்சம் ஆகும்.
கார் மற்றும் குட்காவை பறிமுதல் செய்த போலீசார் இது தொடர்பாக வழக்கு பதிந்து, இதனை யார், எங்கிருந்து, யாருக்காக கடத்தி செல்கின்றனர் என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.