/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
விழுப்புரம் சரஸ்வதி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி சாதனை
/
விழுப்புரம் சரஸ்வதி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி சாதனை
விழுப்புரம் சரஸ்வதி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி சாதனை
விழுப்புரம் சரஸ்வதி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி சாதனை
ADDED : மே 10, 2024 09:22 PM

விழுப்புரம்: விழுப்புரம் சரஸ்வதி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் மாவட்ட அளவில் சிறப்பிடம் பெற்று சாதித்துள்ளது.
இப்பள்ளியில் தேர்வு எழுதிய மாணவர் மித்ரன்சீனு 500க்கு495 மதிப்பெண் எடுத்து, பள்ளியளவிலும், மாவட்ட அளவிலும் சிறப்பிடம் பெற்றுள்ளார். மாணவி அம்ரின் 494, காயத்ரி 491, மாணவர் கிஷோர் 490, மாணவி ருத்ரபிரியா 487 மதிப்பெண் பெற்று சாதித்துள்ளனர்.
தேர்வில் சாதித்த மாணவ, மாணவியர்களை அவரது பெற்றோர்களையும், பள்ளியின் சேர்மன் ரவீந்திரன், பொருளாளர் சிதம்பரநாதன், நிர்வாக அறங்காவலர் முத்துசரவணன், அறங்காவலர் தமிழரசன், தாளாளர் ராஜசேகரன், பள்ளி முதல்வர் யமுனாராணி, துணை முதல்வர்கள், ஆசிரியர்கள் பாராட்டினர்.