/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
தேர்தல் விதிமுறை மீறலா... கூப்பிடுங்கள் மொபைல் எண்ணில்
/
தேர்தல் விதிமுறை மீறலா... கூப்பிடுங்கள் மொபைல் எண்ணில்
தேர்தல் விதிமுறை மீறலா... கூப்பிடுங்கள் மொபைல் எண்ணில்
தேர்தல் விதிமுறை மீறலா... கூப்பிடுங்கள் மொபைல் எண்ணில்
ADDED : மார் 28, 2024 11:06 PM
விழுப்புரம்: லோக்சபா தேர்தலையொட்டி நன்னடத்தை விதி மீறுவோர் குறித்து புகார் தெரிவிக்க மாவட்ட காவல் துறை கட்டுப்பாட்டு அறைக்கு தொடர்பு கொள்ள பிரத்யே மொபைல் எண்கள் வெளியிட்டுள்ளது.
எஸ்.பி., அலுவலக செய்திக்குறிப்பு:
லோக்சபா தேர்தலையொட்டி, விழுப்புரம் எஸ்.பி., அலுவலகத்தில் 24 மணி நேர சுழற்சி முறையில் டி.எஸ்.பி., தலைமையில் காவல் அலுவலர்கள் மூலம் தேர்தல் கட்டுப்பாட்டு அறை இயங்குகிறது. தேர்தல் கட்டுப்பாட்டு அறைக்கு என பிரத்யேகமாக 8925533710, 8925533810 ஆகிய உதவி எண்கள் வழங்கப்பட்டுள்ளது.
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பொதுமக்கள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் அனைவரும் எந்த நேரத்தில் வேண்டுமானாலும் இந்த உதவி எண்களை தொடர்பு கொள்ளலாம்.
தேர்தல் தொடர்பான வதந்தி செய்திகள், தவறான தகவல்களை எஸ்.எம்.எஸ்., வழியாகவோ, சமூக ஊடகங்கள் வழியாகவோ பரப்புவோர் பற்றிய தகவல்களை தெரிவிக்கலாம்.
தேர்தல் சம்பந்தமாக தேர்தல் விதிமுறைகள் பற்றி ஏதேனும் சந்தேகம் வந்தால் அந்த சந்தேகத்தை நிவர்த்தி செய்து கொள்ளலாம்.
விழுப்புரம் மாவட்டத்தில் அமைதியான முறையில் லோக்சபா தேர்தல் நடக்க பொதுமக்கள், அரசியல் பிரமுகர்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.
இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

