/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
100 நாள் வேலை 150 நாளாக உயர தி.மு.க.,வுக்கு ஓட்டு போடுங்கள் அமைச்சர் மஸ்தான் பேச்சு
/
100 நாள் வேலை 150 நாளாக உயர தி.மு.க.,வுக்கு ஓட்டு போடுங்கள் அமைச்சர் மஸ்தான் பேச்சு
100 நாள் வேலை 150 நாளாக உயர தி.மு.க.,வுக்கு ஓட்டு போடுங்கள் அமைச்சர் மஸ்தான் பேச்சு
100 நாள் வேலை 150 நாளாக உயர தி.மு.க.,வுக்கு ஓட்டு போடுங்கள் அமைச்சர் மஸ்தான் பேச்சு
ADDED : ஏப் 14, 2024 05:42 AM

செஞ்சி: 'நுாறு நாள் வேலை திட்டம் 150 நாள் திட்டமாக உயர தி.மு.க., வேட்பாளருக்கு ஓட்டு போடுங்கள்' என அமைச்சர் மஸ்தான் பேசினார்.
செஞ்சி ஒன்றியம் சே.பேட்டை, புத்தகரம், நல்லாண்பிள்ளை பெற்றாள், செத்தவரை கிராமங்களில் ஆரணி தொகுதி தி.மு.க., வேட்பாளர் தரணிவேந்தனுக்கு ஓட்டு கேட்டு அமைச்சர் மஸ்தான் பேசியதாவது:
முதல்வர் ஸ்டாலின் 18 லட்சம் குழந்தைகளுக்கு காலை உணவு திட்டம் வழங்கி உள்ளார். பெண்களுக்கு இலவச பஸ் பயணம், உரிமைத் தொகை வழங்கியவர்
மோடி, பெண்கள் நெற்றியில் வைக்கும் குங்கமத்திற்கும், ஏழை பிள்ளைகள் சாப்பிடும் பிஸ்கெட்டுக்கும் வரி போட்டு வசூலித்தார்.
அம்பானி, அதானியின் கம்பெனிக்கு உங்கள் வீட்டு நிலத்தை பிடுங்கிக் கொடுப்பதற்காக வேளாண்மை சட்டத்தை கொண்டு வந்தவர். விவசாயிகள் போராடி தடுத்து நிறுத்தினர்.
கருப்பு பணத்தை மீட்டு எல்லோர் கணக்கிலும் 15 லட்சம் ரூபாய் தருவதாக மோடி சொன்னார். 15 பைசாவும் தரவில்லை. ஒவ்வொரு ஆண்டும் 2 கோடி பேருக்கு வேலை என்றார் தரவில்லை. ஆனால், திண்டிவனம் அடுத்த பெலாகுப்பத்தில் நம் வீட்டு பிள்ளைகள் 25 ஆயிரம் பேர் வேலைக்கு செல்வதற்காக புதிய தொழிற்சாலைகள் துவங்க இடம் கொடுத்தவர் ஸ்டாலின். 100 நாள் வேலை திட்டம் 150 நாள் வேலை திட்டமாக உயரவும், 250 ரூபாய் கூலி 400 ரூபாயாக உயரவும் தி.மு.க., வேட்பாளருக்கு உதயசூரியன் சின்னத்தில் ஓட்டு போடுங்கள்.
இவ்வாறு அமைச்சர் மஸ்தான் பேசினார்.
ஒன்றிய சேர்மன் விஜயகுமார், காங்., மாநில துணைத் தலைவர் ரங்கபூபதி, துணைச் சேர்மன் ஜெயபாலன், ஒன்றிய செயலாளர்கள் விஜயராகவன், பச்சையப்பன், மாவட்ட கவுன்சிலர் அரங்க ஏழுமலை மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்.

