/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
விக்கிரவாண்டியில் 4 இடங்களில் ஓட்டு பதிவு இயந்திரம் கோளாறு
/
விக்கிரவாண்டியில் 4 இடங்களில் ஓட்டு பதிவு இயந்திரம் கோளாறு
விக்கிரவாண்டியில் 4 இடங்களில் ஓட்டு பதிவு இயந்திரம் கோளாறு
விக்கிரவாண்டியில் 4 இடங்களில் ஓட்டு பதிவு இயந்திரம் கோளாறு
ADDED : ஏப் 20, 2024 06:09 AM
விக்கிரவாண்டி, : ழுப்புரம் லோக்சபா (தனி) தொகுதிக்குட்பட்ட விக்கிரவாண்டி சட்டசபை தொகுதியில் நேற்று காலை 6:00 மணிக்கு ஓட்டுப்பதிவு துவங்கியது.
விக்கிரவாண்டி அடுத்த முண்டியம்பாக்கம் ஓட்டுச்சாவடி எண்.215, கயத்துாரில் ஓட்டுச்சாவடி எண்.259, மாம்பழப்பட்டு ஓட்டுச்சாவடி எண். 64, கல்பட்டு ஓட்டுச்சாவடி எண்.69 ஆகிய இடங்களில் ஓட்டுப் பதிவு இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்டது.
தகவலறிந்த விக்கிரவாண்டி தொகுதி உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் சந்திரசேகர் மற்றும் பெல் நிறுவன இன்ஜினியர்கள் தனித்தனி வாகனங்களில் மாற்று ஓட்டுப்பதிவு இயந்திரங்களை அனுப்பி வைத்தனர்.
இதனால் மாம்பழப்பட்டு, முண்டியம்பாக்கம் பகுதியில் ஒரு மணி நேரமும், பிற பகுதிகளில் 30 நிமிடம் தாமதமாகவும் ஓட்டுப்பதிவு துவங்கியது.