/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
தேர்தல் முடிவைப்பற்றி கவலை கிடையாது செல்வாக்கை நிரூபிக்க ஓட்டு பலம் முக்கியம்
/
தேர்தல் முடிவைப்பற்றி கவலை கிடையாது செல்வாக்கை நிரூபிக்க ஓட்டு பலம் முக்கியம்
தேர்தல் முடிவைப்பற்றி கவலை கிடையாது செல்வாக்கை நிரூபிக்க ஓட்டு பலம் முக்கியம்
தேர்தல் முடிவைப்பற்றி கவலை கிடையாது செல்வாக்கை நிரூபிக்க ஓட்டு பலம் முக்கியம்
ADDED : ஏப் 30, 2024 06:24 AM
விழுப்புரம் தொகுதி தேர்தல் முடிவை பற்றி கவலைபடாமல், ஓட்டு எண்ணிக்கை கூடினால் போதும் என முக்கிய கட்சி நிர்வாகிகள் தெரிவிக்கின்றனர்.
விழுப்புரம் லோக்சபா தொகுதியில் தி.மு.க., கூட்டணியில் வி.சி.., - அ.தி.மு.க., - தே.மு.தி.க., கூட்டணியில் அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணியில் பா.ம.க., மற்றும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
தற்போதைய சிட்டிங் வி.சி., எம்.பி., கடந்த தேர்தலில் தி.மு.க., சின்னத்தில் போட்டியிட்டார். தற்போது, தனிச் சின்னத்தில் போட்டியிடுவதால், கடந்த தேர்தலைவிட ஓட்டு எண்ணிக்கை குறைந்துவிடக் கூடாது என்று கடுமையான தேர்தல் பணியாற்றினர்.
இதேபோல், கடந்த தேர்தலில் பா.ஜ. ,- பா.ம.க., கட்சிகளுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்ட அ.தி.மு.க., அதில் இருந்து விலகி, தே.மு.தி.க.,வுடன் சேர்ந்து போட்டியிடுகிறது. இதனால், கடந்த தேர்தலைபோல் கணிசமான ஓட்டுகள் பெற்று, தங்களது பலத்தை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.
இதேபோல், கடந்த தேர்தலில் அ.தி.மு.க., கூட்டணியில் போட்டியிட்ட பா.ம.க., தற்போது பா.ஜ., கூட்டணியில் போட்டியிடுகிறது. மேலும், கட்சியின் செல்வாக்கு மிகுந்த மாவட்டமான விழுப்புரத்தில் தங்கள் பலத்தை வெளிப்படுத்த வேண்டிய நிலையில் உள்ளது.
பிரதான கட்சிகள் அனைத்தும், வரும் 2026 சட்டசபை தேர்தலுக்கு முன்னோட்டமாக உள்ள லோக்சபா தேர்தலை கருதுகின்றன. ஆளுங்கட்சி கூட்டணியின் அசுர பலத்துடன் மோதுவதால், தேர்தல் முடிவைப் பற்றி எதிர்க்கட்சியினர் கவலைப்படவில்லை என்றும், இத்தேர்தலில், பெறும் கூடுதல் ஓட்டுகள், தங்கள் கட்சி செல்வாக்கை நிலை நிறுத்தும் என தெரிவிக்கின்றனர்.

