/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் விக்கிரவாண்டி வந்தன
/
ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் விக்கிரவாண்டி வந்தன
ADDED : ஜூன் 14, 2024 06:58 AM

விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் ஓட்டுப் பதிவிற்காக மின்னணு இயந்திரங்கள் திருக்கோவிலுாரில் இருந்த கொண்டு வரப்பட்டு விக்கிரவாண்டி தாலுகா அலுவலகத்தில் வைக்கப்பட்டது.
விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் வரும் ஜூலை 10ம் தேதி நடக்கிறது. தொகுதியில் உள்ள 275 ஓட்டுச்சாவடிகளில் ஓட்டு பதிவுக்காக முதல் கட்ட பரிசோதனை செய்யப்பட்ட ஓட்டு பதிவு இயந்திரங்களை திருக்கோவிலுார் தாலுகா அலுவலகத்திலிருந்து தலா 575 பேலட் யூனிட், கண்ட்ரோல் யூனிட், 575 வி.வி., பேடு ஆகியவை போலீஸ் பாதுகாப்புடன் விக்கிரவாண்டி கொண்டு வரப்பட்டு தாலுகா அலுவலகத்தில், நேற்று மாலை 4:00 கொண்டு வரப்பட்டது.
அங்கு, தொகுதி உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் சந்திரசேகரன் தலைமையில் தாசில்தார் யுவராஜ், தனி தாசில்தார்கள் செந்தில்குமார், வெங்கடேசன் வருவாய் ஆய்வாளர் தெய்வீகன், வி.ஏ.ஓ., அண்ணாமலை மற்றும் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் ஸ்டிராங் ரூமில் வைக்கப்பட்டது.