ADDED : மார் 08, 2025 05:22 AM

விழுப்புரம் : விழுப்புரத்தில் மத்திய மாவட்ட தி.மு.க., சார்பில், கோடைக் கால நீர்மோர் பந்தல் திறப்பு விழா நடந்தது.
விழுப்புரம் நகர தி.மு.க., அலுவலகம், பழைய பஸ் நிலையம் சந்திப்பு, தந்தை பெரியார் நகர், எம்.எல்.ஏ., அலுவலகம், 13வது வார்டு ஆகிய இடங்களில் அமைக்கப்பட்ட நீர், மோர் பந்தலை மத்திய மாவட்ட பொறுப்பாளர் லட்சுமணன் திறந்து வைத்தார்.
தொடர்ந்து, தர்பூசணி, வெள்ளரி, இளநீர், பனை நுங்கு, கிர்னி பழங்களும், குளிர்பானங்கள், மோர் உள்ளிட்டவைகளை பொதுமக்களுக்கு, வழங்கினார்.
நிகழ்ச்சியில் மாவட்ட பொருளாளர் ஜனகராஜ், மாநில ஆதிதிராவிடர்நல குழு இணை செயலாளர் புஷ்பராஜ், நகர செயலாளர் சக்கரை, சேர்மன் தமிழ்ச்செல்வி பிரபு, ஒன்றிய சேர்மன் சச்சிதானந்தம்.
பொதுக்குழு உறுப்பினர்கள் பஞ்சநாதன், சம்பத், நகர இளைஞரணி அமைப்பாளர் மணிகண்டன், ஒன்றிய செயலாளர்கள் பிரபாகரன், தெய்வசிகாமணி, முருகவேல், பேரூராட்சி செயலாளர் ஜீவா, பொறியாளர் அணி செல்வகுமார், கவுன்சிலர்கள் மணவாளன், ஜனனி தங்கம், புருஷோத்தமன், சாந்தராஜ், நவநீதம் மணிகண்டன் உட்பட நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.