/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
கிராம கோவில் பூசாரிகளுக்கு நல உதவி
/
கிராம கோவில் பூசாரிகளுக்கு நல உதவி
ADDED : மார் 12, 2025 11:42 PM

விழுப்புரம்; விழுப்புரம் சங்கரமடத்தில் காஞ்சி பீடாதிபதி பிறந்த நாளை முன்னிட்டு 57 கிராம கோவில் பூசாரிகளுக்கு நல உதவி வழங்கினர்.
விழுப்புரம் சங்கர மடத்தில் விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் வருகை தந்தார். காஞ்சிபுரம் செல்லும் வழியில், விழுப்புரம் சங்கர மடத்திற்கு வருகை தந்த அவர் விழுப்புரம் காமகோடி ஓரியண்டல் உயர்நிலை பள்ளியை பார்வையிட்டு மாணவர்களுக்கு ஆசியுரை வழங்கினார். தொடர்ந்து விழுப்புரம் சங்கர மடத்தில் மகா திரிபுரசுந்தரி சமேத சந்திரமவுலீஸ்வரர் பூஜையில் கலந்துகொண்டார்.
தொடர்ந்து, விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கிராம கோவில் பூசாரி தம்பதியினருக்கு வேட்டி, புடவை மற்றும் காசி கயிறு, டாலர், வீபூதி, குங்கும பிரசாதங்களை வழங்கி, விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் ஆசீர்வதித்தார்.
அப்போது, பூசாரிகள் பூஜை செய்யும் கோயில் பெயர், அவர்தான் குடும்பங்கள் குறித்தும் விசாரித்து ஆசி வழங்கினார். இதில், 57 பூசாரி தம்பதியினர்கள் பங்கேற்றனர். நிகழ்ச்சியில் சங்கரமடம் மேலாளர் ராமமூர்த்தி, முன்னாள் கலெக்டர் ராமச்சந்திரன், பம்மல் விஸ்வநாதன், கிராம கோவில் பூசாரிகள் கூட்டமைப்பு தலைவர் தீனதயாளன், விஷ்வ ஹிந்து பரிஷத் நகர தலைவர் சரவணன், நாகராஜன், தியாகராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.