/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
வன்னியர் சங்க மாநில நிர்வாகி நீக்கப்பட்டதன் பின்னணி என்ன? பரபரப்பு தகவல்கள் அம்பலம்
/
வன்னியர் சங்க மாநில நிர்வாகி நீக்கப்பட்டதன் பின்னணி என்ன? பரபரப்பு தகவல்கள் அம்பலம்
வன்னியர் சங்க மாநில நிர்வாகி நீக்கப்பட்டதன் பின்னணி என்ன? பரபரப்பு தகவல்கள் அம்பலம்
வன்னியர் சங்க மாநில நிர்வாகி நீக்கப்பட்டதன் பின்னணி என்ன? பரபரப்பு தகவல்கள் அம்பலம்
ADDED : ஆக 06, 2024 06:51 AM
வன்னியர் சங்க மாநிலச் செயலாளர் நீக்கப்பட்டதன் பின்னணி குறித்து பா.ம.க., வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.
பா.ம.க., நிறுவனர் ராமதாசின் 86வது பிறந்த நாள் விழா கடந்த 25ம் தேதி நடந்தது. அடுத்த நாள் வன்னியர் சங்க மாநிலச் செயலாளரான திண்டிவனம் அடுத்த நல்லாவூரைச் சேர்ந்த கருணாநிதி, கட்சியின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில், ஒழுங்கீன செயல்களில் ஈடுபட்டு வருவதால் வன்னியர் சங்கம் மற்றம் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கப்பட்டதாக, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் அதிரடியாக தெரிவித்திருந்தார்.
நீக்கப்பட்ட கருணாநிதி கடந்த 2006ம் ஆண்டு நடந்த தேர்தலில், திண்டிவனம் சட்டசபை தொகுதியில் அ.தி.மு.க., மாஜி அமைச்சர் சண்முகத்தை எதிர்த்து பா.ம.க., சார்பில் போட்டியிட்டு குறைந்த ஓட்டு வித்தியாசத்தில் தோல்வியடைந்தார்.
நீண்ட காலமாக கட்சியில் இருந்த கருணாநிதி நீக்கப்பட்டது, கட்சி மற்றும் வன்னியர் சங்கத்தினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இது குறித்து கட்சி வட்டாரத்தில் விசாரித்த போது, விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் கருணாநிதி பிரசாரத்திற்கு செல்லாமல் புறக்கணிப்பு செய்துள்ளார்.
கருணாநிதியின் மகன் தி.மு.க., ஆதரவாளராக இருந்ததாகவும், சமீபத்தில் நடந்த லோக்சபா தேர்தலில் தி.மு.க.,கூட்டணிக்கு ஆதரவாக ஓட்டு கேட்டதாக புகார் எழுந்தது.
இதன் எதிரொலியாகத்தான் சமீபத்தில் நடந்த கருணாநிதி இல்ல திருமணத்திற்கு செல்லாமல் ராமதாஸ் புறக்கணிப்பு செய்தாக கூறப்படுகிறது.
இதுமட்டுமின்றி கருணாநிதி மீது தொடர்ந்து கட்சி தலைமைக்கு புகார்கள் வந்ததால், அவர் மீது கட்சியின் நிறுவனர் ராமதாஸ் அதிரடியாக நடவடிக்கை எடுத்து, அவரை கட்சி மற்றும் வன்னியர் சங்கத்தை விட்டு நீக்கும் அளவிற்கு சென்றுள்ளது என தெரிவித்தனர்.
-நமது நிருபர்-