/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
பள்ளி மாணவிகளை கவர பைக் சாகசம் 'ரோமியோ'க்களுக்கு போலீஸ் பாடம் புகட்டுமா?

ADDED : மார் 03, 2025 11:56 PM
கண்டாச்சிபுரத்தில் தேர்வு பள்ளி மாணவிகளைக் கவர காலை, மாலை வேளைகளில் பைக் சாகத்தில் ஈடுபடும் ரோமியோக்களுக்கு போலீஸ் பாடம் புகட்ட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கண்டாச்சிபுரம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் ஏரளமான மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்த மாணவிகளைக் கவர அப்பகுதியில் பள்ளி துவங்கும் நேரத்திலும், மாலை விடும் நேரத்திலம் இளைஞர்கள் பைக் சாகசத்தில் ஈடுபடுகின்றனர்.
அப்பகுதியில் உள்ள டீ கடைகள் முன்பும், பஸ் நிலையம் பகுதிகளில் மாணவிகள் தங்களைப் பார்க்க வேண்டும், அவர்களை கவர வேண்டும் என்ற நோக்கத்தில் செயல்படும் இந்த ரோமியோக்கள் பைக்கில் சீறிப் பாயும்போது அப்பகுதியில் பொதுமக்கள் கடும் அச்சம் அடைகின்றனர்.
ஒரே பைக்கில் மூன்று பேர் அமர்ந்து லுாட்டி அடிக்கும் சம்பவங்களும் நடக்கின்றன. இதிலும், அவர்களுக்குள் போட்டி ஏற்பட்டு அடிதடி ரகளையிலும் ஈடுபடுகின்றனர்.
இதனால் திருக்கோவிலுார் ரோட்டில் பொதுமக்கள் அச்சத்துடனேயே கடந்து செல்கின்றனர். இதுபோன்ற ரோமியோக்களுக்கு போலீஸ் தகுந்த முறையில் பாடம் கற்பிக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர். இதற்கு மாவட்ட எஸ்.பி., தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.