/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
குமலம்பட்டு கிராமத்திற்கு பஸ் வசதி ஏற்படுத்தப்படுமா?
/
குமலம்பட்டு கிராமத்திற்கு பஸ் வசதி ஏற்படுத்தப்படுமா?
குமலம்பட்டு கிராமத்திற்கு பஸ் வசதி ஏற்படுத்தப்படுமா?
குமலம்பட்டு கிராமத்திற்கு பஸ் வசதி ஏற்படுத்தப்படுமா?
ADDED : ஜூன் 05, 2024 10:59 PM
வானுார்: குமலம்பட்டு கிராமத்தில், அமைந்துள்ள பிரசித்தி பெற்ற பேசும் பெருமாள் கோவிலுக்கு பஸ்கள் இயக்கப்படாததால், பக்தர்கள் மற்றும் பொது மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.
உப்புவேலுார் அடுத்த குமலம்பட்டு கிராமத்தில் பிரசித்தி பெற்ற பேசும் பெருமாள் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலுக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் வந்து செல்கின்றனர். குறிப்பாக திண்டிவனம், வானுார் பகுதியை சேர்ந்த பலருக்கு இந்த கோவில் குலதெய்வமாக உள்ளது.
இந்த கோவிலுக்கு அதிகளவில் பக்தர்கள் வந்து செல்கின்றனர். ஆனால், கோவிலுக்கு பக்தர்கள் எளிதாக வந்து செல்லும் வழியில் பஸ் வசதி இல்லை. திண்டிவனம் மற்றும் புதுச்சேரியில் இருந்து வரும் பஸ்கள் உப்புவேலுார் செல்லும் மெயின் ரோட்டில் இறங்கி, அங்கிருந்து 3 கி.மீ., துாரம் நடந்து கோவிலுக்கு செல்லவேண்டியுள்ளது.
பக்தர்கள் மற்றும் பொது மக்கள் நலன் கருதி, அப்பகுதி மக்களும், கோவில் நிர்வாகத்தினரும், அரசு அதிகாரிகளிடம் பல முறை கோரிக்கை வைத்தும், இதுவரை, உப்புவேலுாருக்கு வரும் அரசு மற்றும் தனியார் பஸ்கள், குமலம்பட்டு கிராமத்திற்கு இயக்க நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் பக்தர்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, இந்த கிராமத்திற்கு பஸ் வசதியை ஏற்படுத்தி தர வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.