/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
ஆயுதப்படை பெண் போலீசாருக்கு தனி குடியிருப்பு ஒதுக்கப்படுமா?
/
ஆயுதப்படை பெண் போலீசாருக்கு தனி குடியிருப்பு ஒதுக்கப்படுமா?
ஆயுதப்படை பெண் போலீசாருக்கு தனி குடியிருப்பு ஒதுக்கப்படுமா?
ஆயுதப்படை பெண் போலீசாருக்கு தனி குடியிருப்பு ஒதுக்கப்படுமா?
ADDED : ஆக 06, 2024 06:59 AM
விழுப்புரத்தில் ஆயுதப்படை ஆண், பெண் போலீசாருக்கு ஒரே இடத்தில் குடியிருப்பு வழங்கப்பட்டுள்ளதால் பெண் போலீசார் அதிருப்தியடைந்துள்ளனர்.
விழுப்புரம் மாவட்ட காவல் துறையில் 49 போலீஸ் ஸ்டேஷன்கள் உள்ளது. இங்கு, 1,200க்கும் மேற்பட்ட ஆண், பெண் போலீசார் பணியில் உள்ளனர். இதில், சொந்த வீடு இல்லாதோருக்கும், வெளி மாவட்டங்களில் இருந்து இங்கு வந்து பணிபுரிவோருக்கும், குறைந்த கட்டணத்தில் அரசு சார்பில் காவலர் குடியிருப்புகள் கட்டி கொடுக்கப்பட்டுள்ளது. அடுக்குமாடி குடியிருப்புகள் கொண்ட இந்த கட்டடத்தில் இன்ஸ்பெக்டர், சப்-இன்ஸ்பெக்டர், போலீசார் என தனித்தனியாகவும், ஆண், பெண் போலீசாருக்கு தனித்தனி குடியிருப்புகளும் வழங்கப்பட்டுள்ளது.
இதில், விழுப்புரம் காகுப்பத்தில் உள்ள ஆயுதப்படை பிரிவில் மட்டும் 200க்கும் மேற்பட்ட போலீசார் பணிபுரிகின்றனர். பெரும்பாலும், வெளி மாவட்டங்களில் இருந்து வந்துள்ள ஆயுதப்படை பிரிவு போலீசாருக்கு இங்கேயே அடுக்கு மாடிகளாக 200 குடியிருப்புகள் வழங்கப்பட்டுள்ளது.
இதில், ஆண், பெண் காவலர்களுக்கு என தனித்தனி குடியிருப்புகள் இல்லாததால் ஒரே இடத்தில் இரு பாலர் போலீசாரும் வசிக்கின்றனர்.
இது வெளியூரில் குடும்பத்தை விட்டு விட்டு, இங்கு தனியாக வசிக்கும் பெண் போலீசார் சில அசவுகரியங்களை சந்திக்கும் நிலை ஏற்படுவதால் அதிருப்தியடைந்துள்ளனர். இதனால், பெண் போலீசாருக்கு ஒதுக்கப்படும் குடியிருப்பு பகுதியில் வீடு ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
-நமது நிருபர்-