/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
செஞ்சி பகுதியில் காய்ச்சல் அதிகரிப்பு விழிப்புணர்வு முகாம் நடத்தப்படுமா?
/
செஞ்சி பகுதியில் காய்ச்சல் அதிகரிப்பு விழிப்புணர்வு முகாம் நடத்தப்படுமா?
செஞ்சி பகுதியில் காய்ச்சல் அதிகரிப்பு விழிப்புணர்வு முகாம் நடத்தப்படுமா?
செஞ்சி பகுதியில் காய்ச்சல் அதிகரிப்பு விழிப்புணர்வு முகாம் நடத்தப்படுமா?
ADDED : செப் 08, 2024 06:28 AM
செஞ்சி: செஞ்சி சுற்றுவட்டார பகுதியில் பொது மக்களுக்கு காய்ச்சல் அதிகரித்து வருவதால் சுகாதாரத் துறையினர் ஆய்வு நடத்தி பொது மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.
செஞ்சி மற்றும் சுற்று வட்டார கிராமங்களில் சில நாட்களாக காய்ச்சல் பாதிப்புக்குள்ளாகும் நபர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதன் காரணமாக அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் தனியார் மருத்துமனைகளிலும், கிளினிக்கிலும் ஏராளமானோர் சிகிச்சை பெறுகின்றனர்.
இவர்களில் பெரும்பாலானவர்களுக்கு சிகிச்சை அளித்தும் ஒரு வாரம் வரை காய்ச்சல் நீடிக்கிறது.
தமிழகத்தில் தென்மேற்கு பருவமழையின் போது வழக்கத்தை விட அதிகமாக மழை பெய்து குளம், குட்டைகளில் தண்ணீர் தேங்கியுள்ளன. இதனால் கொசுக்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
தற்போது காய்ச்சல் சதவீதம் அதிகரித்திருப்பதால் பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்துவது அவசியமாகி உள்ளது. காய்ச்சல் வந்தால் சுயமாக மருந்து எடுத்துக் கொள்ளாமல் மருத்துவமனைகளுக்கு சென்று சிகிச்சை பெற வேண்டும் என்றும், காய்ச்சல் நீடித்தல் டெங்கு பரிசோதனை செய்ய வேண்டியதன் அவசியத்தையும் கிராம மக்களிடம் விளக்கி விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.
செஞ்சி பகுதியில் அனைத்து ஊராட்சிகளிலும் சுகாதாரத்துறை மூலம் மருத்துவ முகாம்களை நடத்த மாவட்ட சுகாதாரத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.