/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
உள்ளாட்சி பிரதிநிதிகள் வாகனங்கள் தேர்தல் பணிக்கு பயன்படுத்தப்படுமா?

ADDED : மார் 21, 2024 11:59 AM

விழுப்புரம்: தமிழகத்தில் தேர்தல் நன்னடத்தை விதியால், நிறுத்தி வைக்கப்படும் உள்ளாட்சி பிரதிநிதிகளின் வாகனங்கள், தேர்தல் பணிக்கு பயன்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
லோக்சபா தேர்தலையொட்டி நன்னடத்தை விதிமுறை அமலில் உள்ளது. இதன் காரணமாக உள்ளாட்சி பிரதிநிதிகள் வாகனங்களை பயன்படுத்த தடை விதித்து தேர்தல் அலுவலரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
அதன்படி 1 மாவட்ட சேர்மன், 3 நகரமன்ற தலைவர்கள், 13 ஒன்றிய சேர்மன்கள், 9 பேரூராட்சி சேர்மன்கள் பயன்படுத்தி வரும் அரசு வாகனங்கள் கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
தேர்தல் நன்னடத்தை நடவடிக்கைகள் ஜூன் 4ம் தேதி வரை தொடரும் என்பதால், 2 மாத காலம் இந்த வாகனங்கள் பயன்படுத்தாமல் நிறுத்தி வைக்கப்படலாம்.
தற்போதைய வாகனங்கள் எலக்ட்ரானிக் வாகனங்கள் என்பதால், அதன் பேட்டரி உள்ளிட்ட சாதனங்கள் பழுதாக வாய்ப்புள்ளது.
இதனால், தினசரி பயன்பாட்டுக்கு கொண்டு வரும் விதத்தில், அந்த வாகனங்களை தேர்தல் பணிகளுக்கு பயன்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
அதனை மாவட்ட தேர்தல் அதிகாரிகள் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.