/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
ரேஷன் கடைகளில் காலி பணியிடங்கள் அமைச்சர் கவனிப்பாரா?
/
ரேஷன் கடைகளில் காலி பணியிடங்கள் அமைச்சர் கவனிப்பாரா?
ரேஷன் கடைகளில் காலி பணியிடங்கள் அமைச்சர் கவனிப்பாரா?
ரேஷன் கடைகளில் காலி பணியிடங்கள் அமைச்சர் கவனிப்பாரா?
ADDED : மே 24, 2024 05:47 AM
அவலுார்பேட்டை: மேல்வைலாமூர் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கத்தின் சார்பில் செயல்படும் 5 ரேஷன் கடைகளுக்கு பணியாளர்கள் பணி நியமனம் செய்திட அமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேல்வைலாமூர் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கம் அவலுார்பேட்டையில் செயல்படுகிறது. இந்த சங்கத்தின் சார்பில் அவலுார்பேட்டையில் 2 கடைகள், கடப்பனந்தல், வடுகப்பூண்டி, பரையம்பட்டு, கொடம்பாடி, எதப்பட்டு, குந்தலம்பட்டு, மேல்வைலாமூர் ஆகிய கிராமங்களில் தலா ஒரு கடை என மொத்தம் 9 முழு நேர கடைகள் உள்ளன.
மேலும், ரவணாம்பட்டு, நாராயணபுரம், கரடிகுப்பம், கணபதிபுரம், அடுக்குபாசி உள்ளிட்ட 6 கிராமங்களில் பகுதி நேர ரேஷன் கடைகள் செயல்படுகின்றன. இங்குள்ள ரேஷன் கடைகளில் மொத்தமாக 6,300 ரேஷன் கார்டுதாரர்கள் உள்ளனர்.
முழு நேர கடைகளுக்கு 9 விற்பனையாளர்கள் தேவை. இவற்றில் 5 பேர் பணி ஓய்வு பெற்ற நிலையில், 4 விற்பனையாளர்கள் மட்டுமே அனைத்து கடைகளுக்கும் சுழற்சி முறையில் பணி செய்ய வேண்டிய நிலையில் உள்ளனர்.
இதனால், தொடர்ந்து கடைகளை திறக்க முடியாமல் மக்களிடம் பதில் சொல்ல வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.
அவலுார்பேட்டை ஊராட்சி ஆதிகான் புரவடை கிராமத்தை சேர்ந்த 100 கார்டுதாரர்கள் 2 கி.மீ., தொலைவிலிருந்து அவலுார்பேட்டைக்கு ரேஷன் பொருட்களை வாங்கி செல்வதில் சிரமத்திற்குள்ளாகின்றனர்.
ஆதிகான் புரவடையில் புதிதாக பகுதி நேர கடை அமைக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அதே போல் அடுக்குபாசி கிராமத்தில் செயல்படும் பகுதி நேர கடைக்கு என தனியாக ஆவண வசதிகளும், கை ரேகை வைப்பதற்கான இயந்திரமும் வழங்கப்படவில்லை.
அவலுார்பேட்டை பகுதியில் செயல்படும் அனைத்து ரேஷன் கடைகளுக்கும் பொதுமக்கள் மற்றும் விற்பனையாளர்கள் நலன் கருதி புதிய விற்பனையாளர்களை பணி நியமனம் செய்திட அமைச்சர் மஸ்தான் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.