/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
கிணற்றில் குதித்து பெண் தற்கொலை
/
கிணற்றில் குதித்து பெண் தற்கொலை
ADDED : மார் 03, 2025 03:49 AM
அவலுார்பேட்டை : வளத்தி அருகே கிணற்றில் குதித்து பெண் தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
வளத்தி அடுத்த சின்னசாத்தாம்பாடியைச் சேர்ந்தவர் சக்தி மனைவி பிரியா, 28; இவர்களுக்கு கடந்த 2014 ஆண்டு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர்.
கணவன், மனைவிக்குமிடையே அடிக்கடி குடும்பத் தகராறு இருந்து வந்தது. நேற்று முன்தினம் ஏற்பட்ட தகராறில், பிரியா கோபித்துக் கொண்டு வீட்டிலிருந்து வெளியில் சென்றார்.
அப்பகுதியில் தேடியபோது, அங்குள்ள விவசாய கிணற்றில், பிரியா இறந்து கிடந்தது தெரியவந்தது. மேல்மலையனுார் தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்குச் சென்று பிரியா உடலை மீட்டனர்.
பிரியா தந்தை வெங்கடேசன், கொடுத்த புகாரின்பேரில் வளத்தி போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.