/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
இறப்பு சான்றிதழில் முறைகேடு கலெக்டரிடம் பெண் புகார் மனு
/
இறப்பு சான்றிதழில் முறைகேடு கலெக்டரிடம் பெண் புகார் மனு
இறப்பு சான்றிதழில் முறைகேடு கலெக்டரிடம் பெண் புகார் மனு
இறப்பு சான்றிதழில் முறைகேடு கலெக்டரிடம் பெண் புகார் மனு
ADDED : மார் 03, 2025 11:55 PM

விழுப்புரம்; இறந்த தனது கணவரின் இறப்புச் சான்றிதழில் திருத்தம் செய்து, உறவினர்கள் முறைகேடு செய்ததாக திருப்பூரைச் சேர்ந்த பெண், விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளார்.
விக்கிரவாண்டி அடுத்த பனமலைப்பேட்டையைச் சேர்ந்தவர் செல்வகுமார் மனைவி சுஜாதா. இவர், விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில் அளித்த புகார் மனு:
எனது கணவர் செல்வகுமார், கடந்த 2023ம் ஆண்டு ஜூன் 3ம் தேதி, இறந்தார். 14ம் தேதி, வி.ஏ.ஓ.,விடம் பதிவு செய்து, 20ம் தேதி கணவரின் இறப்பு சான்றிதழை ஆன்லைன் மூலம் பெற்றேன்.
ஆனால், அந்த இறப்பு சான்றிதழில், இறந்தவரின் உறவுமுறையான மனைவி சுஜாதா என்ற பெயரை, கணவருடன் பிறந்த சகோதரிகள் வனிதா, ரேணுகாதேவி, கலைமணி, சகோதரர் பாஸ்கரன் ஆகிய 4 பேரும் சேர்ந்து திருத்தியுள்ளனர்.
கணவர் இறந்த ஓராண்டுக்குப் பின், வி.ஏ.ஓ., மூலம் எனது பெயரை சான்றிதழில் நீக்கம் செய்து, இறப்பு சான்றிதழ் பெற்ற தேதியையும் மாற்றியுள்ளனர்.
எனது கணவருக்கு திருமணம் நடைபெறவில்லை என தவறான தகவல் அளித்து, தற்போது நாங்கள் வசித்து வரும் திருப்பூர் மாவட்டம், நல்லுார் வி.ஏ.ஓ.,விடம் எங்களுடைய வாரிசு சான்றிதழை ரத்து செய்யுமாறு, எனது கணவரின் சகோதரிகள், சகோதரர் மனு அளித்துள்ளனர்.
எனது கணவரின் இறப்பு சான்றிதழில் எனது பெயர் நீக்கம் குறித்து ஆர்.டிஓ., அலுவலகத்திலும், கலெக்டர் அலுவலகத்திலும் மனு அளித்தேன். ஆனாலும், தீர்வு கிடைக்கவில்லை. இந்த பிரச்னைக்குத் தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும்.