
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விக்கிரவாண்டி: விழுப்புரம் அருகேயுள்ள கெடார் அடுத்த கெண்டியாங்குப்பத்தை சேர்ந்தவர் ரேணுகாம்பாள், 55:
இவர் நேற்று காலை கெடாரில் நடந்த மக்களுடன் முதல்வர் முகாமில் மனு கொடுக்க சென்றுவிட்டு  வீடு திரும்பினார். பிற்பகல் 1.25 மணிக்கு பஸ்சில்  அரியலுார்  திருக்கை வந்து இறங்கி ரோட்டை கடக்க முயன்றார்.
அப்போது திருவண்ணா மலையிலிருந்து விழுப்புரம் நோக்கி வந்த கார் ரேணுகாம்பாள் மீது மோதியது.
இதில் துாக்கிவீசப்பட்ட அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார்.
விபத்து குறித்து கெடார் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

