நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம்: விழுப்புரம் அரசு பொறியியல் கல்லுாரியில் உலக மகளிர் தின விழா போட்டிகள் நடந்தது.
விழாவிற்கு, மின்னணுவியல் துறை பேராசிரியர் சரஸ்வதி வரவேற்றார். கல்லுாரி முதல்வர் செந்தில் தலைமை வகித்தார். கலெக்டரின் நேர்முக உதவியாளர் யோகஜோதி சிறப்பு விருந்தினராக பங்கேற்று, போட்டிகளை துவக்கி வைத்து சிறப்புரையாற்றினார்.
தொடர்ந்து, மகளிருக்கான பல்வேறு போட்டிகளும், கலை நிகழ்ச்சிகளும் நடந்தது. சிறப்பாக திறனை வெளிப்படுத்திய மாணவிகளுக்கு பரிசளிக்கப்பட்டது. பேராாசிரியர் தமிழ்ச்செல்வி நன்றி கூறினார்.