ADDED : மார் 15, 2025 06:47 AM

திண்டிவனம்: திண்டிவனம் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில், சர்வதேச மகளிர் தின விழா நடந்தது.
விழாவிற்கு, கூடுதல் மாவட்ட நீதிபதி (1) முகமது பாரூக் தலைமை தாங்கினார். வழக்கறிஞர் வேதவள்ளி வரவேற்றார். வழக்கறிஞர் சங்க தலைவர் கோதண்டம் , அட்வகேட் அசோசியேஷன் தலைவர் தயாளன், வழக்கறிஞர் நலச் சங்க செயலாளர் கிருபாகரன், பெண் வழக்கறிஞர்கள் சங்க தலைவர் கலா ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
தொடர்ந்து மகளிர் பெருமை குறித்து முதன்மை சார்பு நீதிபதி அனுஷா, கூடுதல் சார்பு நீதிபதி ஆயிஷா பேகம், மோட்டார் வாகன தீர்ப்பாய நீதிபதி அகிலா, மாவட்ட உரிமையியல் நீதிபதி நர்மதா, குற்றவியல் நடுவர்கள் கமலா, மாலதி ஆகியோர் பேசினர்.
விழாவையொட்டி, பாட்டு, கவிதை, பேச்சு, ஓவியம், நடன போட்டிகள் நடந்தது. வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.
வழக்கறிஞர் சங்க செயலாளர் பாபு , வழக்கறிஞர்கள் மணிவண்ணன், சேகர், அஜ்மல் அலி, மகேந்திரன், விஜயன், சத்தியவாணி, கோமதி உட்பட பலர் பங்கேற்றனர். வழக்கறிஞர் துளசி நன்றி கூறினார்.