/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
9,436 ஓட்டுச் சாவடி அலுவலர்களுக்கு பணி ஒதுக்கீடு
/
9,436 ஓட்டுச் சாவடி அலுவலர்களுக்கு பணி ஒதுக்கீடு
ADDED : ஏப் 02, 2024 11:30 PM

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில், தேர்தலில் பணிபுரிய உள்ள ஓட்டுச்சாவடி அலுவலர்களுக்கு, கணினி முறையில் பணி ஒதுக்கீடு செய்யும் பணி நடந்தது.
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 7 சட்டசபை தொகுதிகளுக்குட்பட்ட ஓட்டுச்சாவடி மையங்களில் வரும் 19ம் தேதி தேர்தலன்று பணிபுரிய உள்ள ஓட்டுச்சாவடி தலைமை அலுவலர்கள் மற்றும் ஓட்டுப்பதிவு நிலை அலுவலர்களுக்கு, 2ம் கட்டமாக பணியிடம் ஒதுக்கீடு செய்யும் பணி, கணினி மூலம் குலுக்கல் முறையில் நேற்று நடந்தது.
விழுப்புரம் கலெக்டர் அலுவலக தேர்தல் கட்டுப்பாட்டு அறையில், மாவட்ட தேர்தல் அலுவலர் பழனி தலைமையில், தேர்தல் பார்வையாளர்கள் முன்னிலையில் இப்பணி நடந்தது.
பணி ஒதுக்கீடு குறித்து, மாவட்ட தேர்தல் அலுவலர் கூறியதாவது:
மாவட்டத்தில் 1,966 ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மையங்களில், 2ம் கட்டமாக 2,359 ஓட்டுச்சாவடி தலைமை அலுவலர்கள், ஓட்டுப்பதிவு அலுவலர்கள் தலா 2,359 வீதம், நிலை-1, நிலை-2, நிலை-3 அலுவலர்கள், என 9,436 ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்களுக்கு பணி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
இதில், செஞ்சி தொகுதிக்கு 304 மையங்களில், 365 தலைமை அலுவலர்கள், தலா 365 என நிலை 1, நிலை 2, நிலை 3 என மொத்தம் 1,460 அலுவலர்களும், மயிலம் தொகுதிக்கு 267 மையங்களில், 320 தலைமை அலுவலர்கள், தலா 320 நிலை அலுவலர்கள் என 1,280 நிலை அலுவலர்களும் நியமிக்கப்பட்டனர்.
திண்டிவனம் (தனி) தொகுதிக்கு 267 மையங்களில், 320 தலைமை அலுவலர்கள், தலா 320 நிலை அலுவலர்கள் என மொத்தம் 1,280 அலுவலர்களுக்கும், வானுார் (தனி) தொகுதிக்குட்பட்ட 278 மையங்களில், 334 தலைமை அலுவலர்கள், தலா 334 நிலை அலுவலர்கள் என மொத்தம் 1,336 அலுவலர்களுக்கும் பணி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
விழுப்புரம் தொகுதிக்குட்பட்ட 289 ஓட்டுச்சாவடிக்கு 347 தலைமை அலுவலர்கள், தலா 347 நிலை அலுவலர்கள் என மொத்தம் 1,388 அலுவலர்களுக்கும் பணி ஒதுக்கீடு நடந்தது.
விக்கிரவாண்டி தொகுதிக்கு 275 மையங்களில், 330 தலைமை அலுவலர்கள், தலா 330 நிலை அலுவலர்கள் என 1320 அலுவலர்களுக்கும், திருக்கோவிலுார் தொகுதிக்கு 286 மையங்களில் 343 தலைமை அலுவலர்கள், தலா 343 நிலை அலுவலர்கள் என 1,372 அலுவலர்களுக்கு என, மாவட்டம் முழுதும் 1,966 ஓட்டுச்சாவடி மையங்களுக்கு, 2,359 தலைமை அலுவலர்களும், தலா 2,359 ஓட்டுப்பதிவு 3 நிலை அலுவலர்கள் என 9,436 ஓட்டுச்சாவடி அலுவலர்களுக்கு பணி ஒதுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு மாவட்ட தேர்தல் அலுவலர் கூறினார்.

